இதுக்கு வெளிப்படையா பாஜகவில் சேர்ந்துடலாமே? ரஜினியைக் கலாய்த்த அரசியல் பிரமுகர்!

Published on: February 5, 2020
---Advertisement---

ef96db6f628841abeb9dba4d3de28ad3

ரஜினி இன்று தன் வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து குடியுரிமைத் திருத்த சட்டம் குறித்து பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போதெல்லாம் சர்ச்சையான கருத்துகளை சொல்லி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் ரஜினி. அந்த வகையில் இன்று தன் வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் குடியுரிமைத் திருத்த சட்டம் நாட்டுக்கு அவசியம் என்றும் இதனால் முஸ்லீம் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரல் கொடுக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் பேச்சு சமூகவலைதளங்களில் கேலிக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது. பலரும் அவரை பாஜக ஆட்டுவிக்கும் பொம்மை என கூறிவரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் ‘இப்படி பேசுவதற்குப் பதிலாக நேராக பாஜகவில் சேர்ந்துவிடலாமே’ என ரஜினியை நக்கல் செய்துள்ளார்.

Leave a Comment