Cinema News
ஒரே ஒரு நகைச்சுவையால் கமலின் அகங்காரத்தை அடக்கிய நடிகர் நாகேஷ்…சூப்பர் ஹிட் காமெடி சீன்…
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஜாம்பவான்கள் நிறைய பேர் இருந்தாலும் இப்ப உள்ள தலைமுறைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் நடிகர் நாகேஷ் தான். இவரின் நகைச்சுவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். ரையுலகில் கொடிகட்டி பறந்த நாகேஷ் வயதான காலத்திலும் அடுத்த அடுத்த தலைமுறைகளோடும் நடிக்க ஆரம்பித்தார்.
கமல், ரஜினி, பிரபு இப்படி 80 களிலும் இவரின் நகைச்சுவை தொடர்ந்து கொண்டே இருந்தது. படிக்காதவன், அபூர்வசகோதரர்கள், வசூல் ராஜா எம்பிபிஎஸ், அவ்வைசண்முகி போன்ற படங்களில் இவரின் காமெடி பட்டையை கிளப்பியது. ஒரு சமயம் அபூர்வசகோதர்கள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடந்து சுவாரஸ்யமான சம்பவத்தை நடிகர் கமல் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்கள் : விஜயின் அடுத்தடுத்த பிளான்…! ரகசியமாக நடந்த துபாய் பிஸினஸ்….
அந்த படத்தில் நடிகர் நாகேஷ் வில்லனாக நடித்திருப்பார். படத்தின் பெரும்பாலான நகைச்சுவை வசனங்களை கமலும் கிரேஸிமோகனும் தான் ஆலோசித்து எழுதியிருந்தனராம். அப்போது இரண்டு பேரும் சூப்பர் நகைச்சுவை வசனங்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது என மார்தட்டி கொண்டு திமிராக இருந்ததாக கமலே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
இதையும் படிங்கள் : யுவன் பிறந்த கதை தெரியுமா.?! அழகாய் விவரிக்கும் இளையராஜா.. வைரலாய் பரவும் அந்த வீடியோ…
அப்போது ஒரு சீனில் ராஜா கதாபாத்திரத்தில் நடித்த ஒரு கமலை தூக்கிட்டு வருவதற்கு பதிலாக குட்டையாக இருக்கும் அப்பு கமலை அடியாள்கள் சாக்கில் தூக்கிட்டு வந்திருப்பார்கள். திடீரென நாகேஷ் இதை பார்த்து என்ன பாக்கிய காணோம் என கேட்க அனைவரும் சிரித்து விட்டனராம். ஏனெனில் இந்த பாக்கி என்ற டையலாக் ஸ்கிரிப்டிலயே இல்லையாம். எதார்த்தமாக சொன்னது எல்லாரையும் சிரிக்க வைத்து விட்டதாம். இதை பார்த்த கமலும் கிரேஸி மோகனும் இவ்ளோ நேரம் உட்கார்ந்து எழுதினோமே இதை யோசிச்சோமா? அந்த ஆளு ஒரே டையாலாக்குல மொத்தத்தையும் காலி பண்ணிட்டாரேனு புலம்பி இப்ப அவர் சொன்னதுக்கு பதில் வசனம் சொல்லவேண்டுமே என பாக்கி-னு கேட்டதும் இவ்ளோ தான் கிடைச்சது என அந்த அடியாள்கள் கூறுவது போல அமைத்து விட்டனராம்.