சிவாஜியின் சம்பளத்தை டிஃபன் கேரியரில் கொடுத்தனுப்பிய பிரபல நடிகர்…!சும்மா இருப்பாரா நடிகர் திலகம்…?

Published on: September 8, 2022
sivaji_main_cine
---Advertisement---

தமிழ் சினிமாவின் நடிகர் திலகமாக இருந்தவர் நடிகர் சிவாஜிகணேசன். நாடகக் குழுவில் ஆரம்பித்த பயணத்தை பராசக்தி மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதில் அவர் பேசிய வசனம் தான் அனைவரையும் இப்படியும் ஒரு நடிகர் இருக்க முடியுமா என யோசிக்க வைத்தது.

sivaji1_cine

அதன் பின் தொடர்ச்சியான படங்களில் இவர் நடித்த நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்தார். நடிப்புக்கு சொந்தக்காரன், நடிப்பு அரக்கன் என பலவாறு இவரை குறிப்பிடலாம். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக இவர் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்கள் : மணிக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சேன்…கமல்தான் காப்பாத்தினார்…சீக்ரெட் சொன்ன ரஜினி….

sivaji2_cine

அப்படி பட்ட நடிகர் காவல் தெய்வம் என்ற படத்தில் தன் நண்பனுக்காக உதவி செய்யப் போக கொந்தளிப்பில் திரும்பிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது காவல் தெய்வம் என்ற படத்தை எஸ்.வி.சுப்பையா என்பவர் எடுக்க அந்த படத்திற்காக சிவாஜி சம்பளமே வாங்கவில்லையாம். காரணம் எஸ்.வி.சுப்பையா ஒரு நடிகரும் கூட. அவரின் நடிப்பும் அவரையும் பிடிக்கும் என்பதற்காகவே வேண்டாம் என கூறிவிட்டாராம்.

sivaji3_cine

படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றதாம். ஆனால் சிவாஜிக்கு எப்படியாவது சம்பளம் கொடுக்கவேண்டுமே. கொடுத்தால் வாங்க மாட்டார் என நினைத்து ஒரு டிஃபன் கேரியரில் சாப்பாடும் ஒரு தட்டில் 15000 சம்பளமும் கொடுத்து சாப்பாடு வைத்திருக்கிறேன். கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என சுப்பையா கூறி சிவாஜியிடம் கொடுத்து விட்டாராம். சிவாஜி உடனே சாப்பிடுவதற்கு டிஃபனை திறக்க உள்ள பணம் இருந்திருக்கிறது. பார்த்ததும் கோபப்பட்ட சிவாஜி சுப்பையாவிடம் என் சம்பளம் எவ்வளவு தெரியுமா? நான் வேண்டாம் என்று சொல்லியும் கொடுத்தனுப்பியிருக்க என்று கோபப்பட்டு அதை திருப்பி கொடுத்து விட்டாராம் சிவாஜி.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.