Cinema News
ஜெயலலிதாவை நாயகியாக்க விரும்பிய எம்.ஜி.ஆர்…! நடக்காததால் என்னெல்லாம் பண்ணியிருக்காரு பாருங்க…!
எம்.ஜி.ஆர்ரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் எம்.ஆர்.வீரப்பன். இவர் நாடகக்குழுவில் இருந்த போது எம்.ஜி.ஆருடன் பணியாற்றியவர். மேலும் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவரின் தயாரிப்பில் சாணக்யா இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பில் நான் ஆணையிட்டால் என்ற படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் வீரப்பன்.
ஏற்கெனவே எங்கள் வீட்டு பிள்ளை என்ற வெற்றிப்படத்தை கொடுத்தவர் சாணக்யா என்பதால் எம்.ஜி.ஆரும் சரி என்று சொல்லிவிட ஆமாம், நாயகி யார் என கேட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். அந்த சமயம் அன்பே வா படத்தின் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார்.அந்த படத்தில் சரோஜா தேவி நடிகை. அதனால் சரோஜாதேவி தான் இந்த படத்திற்கும் கதாநாயகி என சொல்லியிருக்கிறார் வீரப்பன்.
இதையும் படிங்கள் : தமிழ் சினிமாவின் இன்னொரு விஜயகாந்த்….! ஏவிஎம் நிறுவனத்தையே புறக்கணித்த நடிகர்…காரணம் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க…
ஆனால் எம்.ஜி.ஆர் ஏன்? ஜெயலலிதா கதாநாயகியாக போடலாமே. அந்த பொண்ணு நல்லாதான நடிக்குது என சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர். ஆனால் வீரப்பனுக்கோ சரோஜா தேவி தான் நடிக்க வேண்டும் என ஆசை. இதெல்லாம் பேசிவிட்டு வந்த வீரப்பனுக்கு மறுநாள் ஒரு அதிர்ச்சியான செய்தி பத்திரிக்கையில் காத்திருந்தது. என்னவெனில் வீரப்பன் தயாரிப்பில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடிப்பில் நான் ஆணையிட்டால் படம் தயாராகிறது என்ற செய்தி தான்.
இதையும் படிங்கள் : பாண்டியனுக்கு பாரதிராஜா அறை விட, ரேவதிக்கு பாண்டியன் அறை விட… படப்பிடிப்பில் நிகழ்ந்த களேபரம்..
வீரப்பனுக்கோ இது எப்படி சாத்தியம்? ஒரு வேளை எம்.ஜி.ஆர் சொல்லியிருப்பாரோ என்ற கவலை. உடனே அவரை பார்த்து இந்த மாதிரி செய்தி வந்திருக்கிறதே பார்த்தீங்களா என கேட்க வந்தால் என்ன? நானும் அதை தான் கேட்கிறேன். ஜெயலலித நடித்தால் என்ன? என்று கூற வீரப்பன் இல்லை கதைக்கு சரோஜா தேவி தான் பொருத்தமாக இருப்பார் என்று ஆணித்தரமாக கூறினார். வேறு வழியின்றி சரோஜா தேவி நடிப்பில் படம் தயாரானது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் போகவில்லை. காரணம் எம்.ஜி.ஆர் தான் என கூறினாராம் வீரப்பன். ஏனெனில் கதையின் க்ளைமாக்ஸ் காட்சியை மாற்றியது எம்.ஜி.ஆர் தானாம். ஆனால் எம்.ஜி.ஆர்ரோ படத்தை வெளியிட்ட நேரம் சரியில்லை என்று வாதாடியிருக்கிறார். ஏனென்றால் அன்பே வா படத்திற்கும் முகராசி படத்திற்கும் இடைப்பட்ட காலங்களில் நான் ஆணையிட்டால் படம் வெளியானது தான் தப்பு என இருவரும் வாதாடிக் கொண்டே இருந்திருக்கின்றனர்.