
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், பிரபல பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ராகுல் டிராவிட், இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்பட்டார். அவர் பேட்டிங் செய்ய களமிறங்கிவிட்டால் எதிரணி பந்துவீச்சாளர்கள் அவரை அவுட்டாக திணறி விடுவார்கள். ரன் அடிக்கிறாரோ இல்லையோ அவர் எளிதில் அவுட்டாக மாட்டார் என்பதே அவரது மிகப்பெரிய பலமாகும்
இந்த நிலையில் தற்போது ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிடும் கிரிக்கெட் களத்தில் இறங்கி கலக்கி வருகிறார். இன்று பெங்களூரில் நடைபெற்ற பிரசிடென்ட் லெவன் அணிக்கு தர்வாத் ஜோன் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டி ஒன்றில் ராகுல் டிராவிட் மகன் சம்ரிட் டிராவிட் விளையாடினார். இவர் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 250 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் டபுள் செஞ்சுரி அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக பந்துவீசி 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும் இந்த போட்டி டிராவில் முடிந்தது. தனது தந்தை ராகுல் டிராவிட் கொடுத்த பயிற்சிதான் தன்னை இந்த அளவுக்கு சிறப்பாக விளையாட வழிவகுத்தது என்று சம்ரிட் டிராவிட் போட்டி முடிந்தவுடன் பேட்டி கொடுத்தார்.
இதேபோல் உள்ளூர் போட்டிகளில் அசத்தலாக விளையாடினால் நிச்சயம் ஒருநாள் அவர் இந்திய அணியில் இடம் பெறுவார் என்றும் ராகுல் டிராவிட் போலவே இந்திய அணியிலும் பல சாதனைகள் படைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கிரிக்கெட் வர்ணனையாளர் கருத்து கூறி வருகின்றனர்



