முருகதாஸே மன்னிப்புக் கேள் – சென்னையில் போஸ்டர் ஒட்டிய தர்பார் விநியோகஸ்தர்கள்!

Published on: February 6, 2020
---Advertisement---

fb5b74e85076c21c9f562cd6568af886

தர்பார் படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸை சந்திக்க முயன்று அது தோல்வியில் முடிந்துள்ளது.

தர்பார் படத்தை வாங்கிய தங்களுக்குப் பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக சில விநியோகஸ்தர்கள் ரஜினியை சந்தித்து முறையிட முயன்றனர். ஆனால் அந்த முயற்சி நடக்காமல் போகவே அவர்கள் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை சந்திக்காத முருகதாஸ் காவல்துறையிடம் தனது வீட்டுக்கு வந்து சிலர் தொந்தரவு செய்வதாக சொல்லி புகார் கொடுத்துள்ளார். இதனால் விநியோகஸ்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதையடுத்து முருகதாஸின் இந்த செயலைக் கண்டிக்கும் விதமாக சென்னையின் சில பகுதிகளில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து இயக்குனர் A R முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படத்தில் பல கோடி நஷ்டமடைந்து நீதி கேட்டு தார்மீக அடிப்படையில் அலுவலகம் வந்த விநியோகிஸ்தர்களை காவல் துறையை விட்டு அவமானப்படுத்திய இயக்குனர் .ஆர்.முருகதாஸே மன்னிப்பு கேள்’ என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து முருகதாஸ் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது விநியோகஸ்தர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.

Leave a Comment