
Cinema News
புதுப்புது அர்த்தங்கள் படத்தின் வாய்ப்பை மிஸ் செய்த பிரபல நடிகை… சுரேஷ் சக்ரவர்த்தி லீக் செய்த சூப்பர் தகவல்
Published on
By
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் 90ஸ் நடிகரான சுரேஷ் சக்கரவர்த்தி. இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து கவனம் பெற்றவர்.
இவர் தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, அவருக்கு தெலுங்கில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அங்கு சென்றவர், ஒரு படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் சீனில், நடிக்க மாட்டேன் என முரண்டு பிடித்திருக்கிறார். எஸ்.பி.பியோ தனக்கு ஸ்டூடியோ செல்ல நேரமாகிறது. ஏன் நடிக்க மாட்டாய் எனக் கேள்வி எழுப்பினார். இந்த டயலாக் எல்லாம் கெட்ட வார்த்தை எனக் கூறினாராம். அதிர்ந்த எஸ்.பி.பி வாங்கி பார்த்தவர். அடடா! இது தெலுங்கில் நல்ல வார்த்தை தான் பேசு எனக் கூறினாராம். ஆனாலும், சுரேஷ் முரண்டு பிடிக்க கடுப்பான எஸ்.பி.பி இது தமிழில் தான் கெட்ட வார்த்தை. தெலுங்கில் இதற்கு வேறு நல்ல அர்த்தம் தான் என பொறுமையாக கூறிய பிறகே நடித்தாராம்.
தனது திரைப்பயணம் குறித்து சமீபத்தில் பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் பேசியவர், முதலில் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் ரஹ்மான் ரோலில் நடிக்க இருந்தது கார்த்திக். அமலா தான் கீதா ரோலில் நடிக்க இருந்ததாக தெரிவித்து இருக்கிறார். அதற்காக உடைகள் எல்லாம் தைய்த்து விட்ட நிலையில், திடீரென அப்படத்தில் இருந்து கார்த்திக்கும், அமலாவும் விலகினர். காரணம் எல்லாம் தெரியவில்லை. புது புது அர்த்தங்களுக்கு தைத்த உடையை தான் வெற்றிவிழா படத்துக்கு பயன்படுத்தினார் அமலா எனவும் கூறினார்.
மேலும், அவர்கள் இணைந்து நடிக்காமல் இருந்ததே நல்லது எனவும் சர்க்காஸ்டிக்காக தெரிவித்து இருக்கிறார். 1989 இல் வெளிவந்த புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பின்னர் ரகுமான் நடித்தார். அமலா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் கீதா நடித்தார். இப்படத்தை கே. பாலசந்தர் இயக்கினார். அப்படத்தின் கல்யாணமாலை பாடல் இன்றளவிலும் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
Manikandan: எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்து போராடி பல வேலைகளை செய்து...
Ajith: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. மனைவி ஷாலினி கேட்டுக்...
Idli kadai: பாக்கியராஜின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே...
Idli kadai Review: தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இதற்கு முன்...
Vijay: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து அந்த...