
Cinema News
வேர்ல்டு லெவல் டிரெண்ட் ஆன மல்லிப்பூ பாடல்.. ரஹ்மான் இல்லைன்னா அவ்வளவுதான்.. சீக்ரெட்டை உடைத்த கௌதம்..
Published on
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் கடந்த 15 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார் சிம்புவின் தாயாராக நடித்திருக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட் ஆனது. குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மல்லிப்பூ” பாடல் உலக அளவில் ரீச் ஆனது. இணையத்தில் இப்பாடலை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் இத்திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் பேசிய கௌதம் மேனன் “மல்லிப்பூ பாடல் இப்போது வேற லெவலில் ஹிட் ஆகி இருக்கிறது. ஆனால் இத்திரைப்படத்தில் அந்த பாடலுக்கான இடமே முதலில் எழுதப்படவில்லை. படத்தில் அந்த நபர் வீடியோ கால் பேசுவது போல் தான் எழுதியிருந்தோம்.
ரஹ்மான் என்னை அழைத்து, இதனை ஒரு பாடலாக உருவாக்கலாம் என்றார். அதற்கு தனியாக காட்சியையும் எழுதிகொண்டு வரச்சொன்னார். அவரால் தான் இப்பாடல் உருவானது. அப்பாடல் ஹிட் ஆனதற்கு முழு காரணமும் ரஹ்மான் தான்” என கூறியுள்ளார். “மல்லிப்பூ” பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Ajith: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. மனைவி ஷாலினி கேட்டுக்...
Idli kadai: பாக்கியராஜின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே...
Idli kadai Review: தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இதற்கு முன்...
Vijay: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து அந்த...
Idli kadai: ராயன் திரைப்படத்திற்கு பின் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படம் நேற்று வெளியானது.. இந்த படத்தை ரெட்ஜெயண்ட்...