Cinema History
நம்பியார் யாருக்கும் உதவி செய்யமாட்டார்… ஏன் தெரியுமா?
60ஸ்களில் மிகப்பெரிய நடிகராக இருந்தவர் நம்பியார். சினிமா வாழ்க்கையை நாயகனாக தொடங்கினார். ஆனால், அது அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. அப்பொழுது தான் அவருக்கு வில்லன் வேடங்கள் கிடைத்தது. யோசித்துக் கொண்டே, நடிக்க தொடங்கி இருக்கிறார். ஆனால் அப்பொழுதே மிகப்பெரிய பெயரை அவருக்கு வாங்கி கொடுத்திருக்கிறது.
இன்று வரை வில்லனுக்கு நம்பியாரை எடுத்துக்காட்டாக சொல்வது மாறவில்லை. காசு விஷயத்தில் பெரிய சிக்கனத்தை கடைபிடித்து வந்திருக்கிறார். ஹோட்டல் உணவை சாப்பிட்டதே இல்லையாம். தனது மனைவி ருக்மணி சமைத்ததை மட்டுமே சாப்பிடுவாராம்.
சினிமாவில் கொடூரமான வில்லன் கதாபாத்திரம் ஏற்றாலும், நிஜத்தில் சாதுவான குணம் கொண்டவர். சபரிமலை ஸ்ரீ அய்யப்பனின் தீவிர பக்தராகவும் இருந்தார். இதனால் அசைவம் எடுத்துக் கொள்வதை அறவே வெறுத்து ஒதுக்கினார். அதுமட்டுமல்லாது, எந்த விதமான கெட்ட பழக்கங்களும் அவருக்கு இல்லையாம்.
இதையும் படிங்க: 80களில் கலக்கிய நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் அட்டகாசமான படங்கள்
ஆனால், நம்பியாருக்கு பிறருக்கு உதவும் பழக்கம் இல்லை. இதற்காக காரணம் பெரிதாக சொல்லப்படவில்லை என்றாலும், அவரது சிக்கன நடவடிக்கை தான் எனத் தெரிகிறது. தனது சினிமா வாழ்க்கையில் அவர் வாங்கிய ரூ.3 சம்பளத்தை வேணாக செலவு செய்யமாட்டாராம். அதில், ஒரு ரூபாய் தனக்கு வைத்துக் கொண்டு ரூ.2 ஐ தனது அன்னைக்கு அனுப்பி விடுவாராம். இதனால் கூட பிறருக்கு உதவுவதை நம்பியார் விரும்பவில்லை எனத் தெரிகிறது.