
Cinema News
இந்தியாவிலேயே சாதனை படைத்த சிவாஜி தொட்ட நூறாவது படத்திற்கு இம்புட்டு சிக்கலா?!
Published on
64களில் களில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பல்வேறு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருந்த காலம்.
கர்ணன், முரடன் முத்து, அன்புக்கரங்கள், பழனி, சாந்தி, பச்சை விளக்சுகு, ஆண்டவன் கட்டளை, கைகொடுத்த தெய்வம் என்று படுபிசியாக நடித்து வந்தார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அப்போது இயக்குனர் ஏ.பி.நாகராஜன் தனது சொந்தப்படத்திற்கு சிவாஜியிடம் கால்ஷீட் கேட்கிறார். ஆனால் அவரோ ரொம்ப பிசியாக இருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.
sivaji
அப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இருக்கிறார். ஆனால் ஏபி.நாகராஜன் சொன்ன கதை அவருக்கும் சண்முகத்திற்கும் பிடித்துப் போய்விடுகிறது. உடனே ஏபி.நாகராஜன் சொல்கிறார். இந்தக் கதையை 9 ராத்திரிகளில் நடப்பதைப் போல திரைக்கதையை அமைத்திருக்கிறேன். ஆகவே எனக்கு நைட் கால்ஷீட் கொடுத்தால் கூட போதும் என்கிறார். ஒப்புக்கொண்டு படம் ஆரம்பிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பிலிம் நியூஸ் ஆனந்தன் நடிகர் திலகத்தையும் சண்முகத்தையும் சந்தித்து கை கொடுத்த தெய்வம் சிவாஜியின் 97வது படம். 100 படங்களுக்கு இன்னும் 3 படங்களே பாக்கி என்கிறார். அந்தக் கால கட்டத்தில் ஒரு நடிகர் அதுவும் ஹீரோவாகவே நடித்து 100 படங்கள் வந்து விட்டால் அது மிகப்பெரிய சாதனை. முதன் முதலாக இந்தியாவிலேயே சிவாஜி இந்த சாதனையை நிகழ்த்தப் போகிறார்.
64 செப்டம்பரில் புதிய பறவை வெளியாவதற்குத் தயாராக உள்ளது. அது 98வது படமாக அமையும். இந்த நேரத்தில் இந்த செய்தியைக் கேள்விப்படும் இயக்குனர் பந்துலு முரடன் முத்து படத்தை 100வது படமாக அறிவிக்கச் சொல்கிறார். ஆனால் சிவாஜியும், சண்முகமும் அதை ஒப்புக்கொள்ளவில்லை.
100 வது படம் என்று ஒரு முக்கியமான படமாக இருக்கும்போது அது குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதற்குப் பொருத்தமாக நவராத்திரி அமைகிறது. முதன்முறையாக ஒரு நடிகர் 9 வேடங்களில் நடிக்கிறார் என்ற தனிச்சிறப்பும் இருக்கிறது. ஆகவே அந்தப்படத்தை 100வது படமாக அறிவிக்கச் சொல்லலாம் என சொல்கின்றனர்.
நடிகர் திலகம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஒப்புக்கொள்ளாத பந்துலு தனது காரியத்திலேயே குறியாக இருக்கிறார். நடிகர் திலகம் நினைத்திருந்தால் இந்த இரு படங்களையும் விட்டுவிட்டு புதிய பறவை படத்தை 100வது படமாக அறிவித்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. திட்டமிட்டபடி புதிய பறவை செப்.12 அன்று வெளியானது.
முன்னர் திட்டமிட்டபடி நவராத்திரி, முரடன் முத்து இரு படங்களுமே 64 நவம்பர் 3 தீபாவளி அன்று வெளியாகிறது. அதே நாளில் பத்மினி பிக்சர்ஸ்சின் அடுத்த தயாரிப்பு என்று ஆயிரத்தில் ஒருவன் படம் என்று அறிவிக்கிறது. முரடன் முத்துவைப் பற்றி சிவாஜி சொல்லும்போது நண்பர்கள் பிரிந்தனர் என்றார்.
தன் வீட்டு விசேஷங்கள் எது என்றாலும் பந்துலுவை சிவாஜி அழைத்து விடுவார். நடிகர் திலகம் அணிவித்த மோதிரம் ஒன்று பந்துலுவின் கையில் எப்போதும் இருந்தது. ஆனால் பந்துலு சிவாஜியைப் பிரிந்து நாடோடி, தேடி வந்த மாப்பிள்ளை, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என எதுவுமே 100 நாள்களைத் தொடவில்லை.
ஆயிரத்தில் ஒருவன் கூட சென்னையில் மட்டுமே 100 நாள்கள் ஓடியது.
Manikandan: எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்து போராடி பல வேலைகளை செய்து...
Ajith: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. மனைவி ஷாலினி கேட்டுக்...
Idli kadai: பாக்கியராஜின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே...
Idli kadai Review: தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இதற்கு முன்...
Vijay: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து அந்த...