
தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படம் உள்பட சுமார் எட்டு படங்களில் நடித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. வெங்கடகிருஷ்ண ரோக்நாத் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
இதனை அடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பது மேகாஆகாஷா? அல்லது ரித்விகாவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு படம் வெளியானவுடன் தான் விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நகைச்சுவை விவேக் மற்றும் இயக்குனர் மோகன் ராஜா ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பதும், இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு இசைக் கலைஞராக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Happy to welcome onboard @Riythvika for MakkalSelvan @VijaySethuOffl ‘s #YaadhumOoreYaavarumKelir.@ChandaraaArts @cineinnovations @roghanth @akash_megha @Actor_Vivek @jayam_mohanraja @nivaskprasanna @raguadityaa @designpoint001 @rkajay94 @onlynikil @CtcMediaboy pic.twitter.com/6FoxsmePjr
— pa.ranjith (@beemji) February 6, 2020