விஜய் வீட்டில் ஒரு ரூபாய் கூட கருப்புப்பணம் இல்லை: வருமான வரித்துறை

Published on: February 6, 2020
---Advertisement---

be4fd9beb53f95b142c6ed5d61e0aebe

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் கடந்த 18 மணி நேரமாக சோதனை நடத்திய நிலையில் தற்போது இந்த சோதனை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் விஜய் வீட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்பட்டதாக எந்த ஒரு தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் பிகில் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்திற்காக பைனான்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் இருந்து ரூபாய் 77 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பணத்திற்கு இனிமேல் விளக்கம் கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

மேலும்  பிகில் படத்தில் நடித்ததற்காக விஜய் ரூ.30 கோடி சம்பளம் பெற்று உள்ளதாக வருமானவரித் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு சம்பளமாக 70 கோடி, 80 கோடி என சினிமா டிராக்காரர்கள் கூறியது சுத்தப் பொய் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது 

விஜய்யின் சாலிகிராமம் வீடு, நீலாங்கரை வீடு மற்றும் பனையூர் வீடு ஆகிய இடங்களில் சோதனை செய்ததில் விஜய்க்கு சொந்தமான இடங்கள் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இந்த சொத்துக்கள் வாங்கியது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு வருவதாகவும் இது குறித்து விஜய் மற்றும் விஜய்யின் மனைவி சங்கீதா ஆகியோர்களிடம் வாக்குமூலம் பெற வருமானத் துறை அதிகாரிகள் தீவிரமாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Comment