“விஜயகாந்த்தான் சூப்பர் ஸ்டார்.. ஆனா ஜஸ்ட் மிஸ்”… ரஜினி வயிற்றில் புளியை கரைத்த சம்பவம்

Published on: September 22, 2022
---Advertisement---

தமிழ் சினிமா ரசிகர்களால் “கேப்டன்” என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். ரஜினி-கமல் ஆகியோர் தமிழ் சினிமாத்துறையையே கோலோச்சிய காலத்தில் அவர்களுக்கு இணையான நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த்.

தனது திரைப்படங்களின் மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் இருக்கும் ரசிகர்களை எல்லாம் கவர்ந்திழுத்தவர் இவர். இவருடன் பழகியவர்கள் இவரை வள்ளல் என அழைப்பது உண்டு. இந்த செல்வாக்குதான் இவரை அரசியலை நோக்கித் தள்ளியது. தன்னை நாடி வந்த பலருக்கும் இவர் எந்த குறையும் இல்லாமல் உதவி செய்து அனுப்புபவர். அதனால்தான் இவரை “கேப்டன்” என அழைக்கிறார்களோ?

பல வெற்றித்திரைப்படங்களில் நடித்து வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியல் கட்சித் தொடங்கினார். கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் யாரும் எதிர்பார்த்திரா வகையில் அமோக வாக்குகள் பெற்ற தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கட்சி என்ற வகையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த்.

அதன் பின் சில காலம் கள அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த விஜயகாந்த் பின்னாளில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தீவிரமாக இயங்கமுடியாமல் போய்விட்டது.

இவ்வாறு மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்த விஜயகாந்த், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் இருந்து ஜஸ்ட் மிஸ் ஆன சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் பன்னீர், இது குறித்து ஒரு சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது 1988 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான “செந்தூரப்பூவே” திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்ததாம்.

எந்த அளவுக்கு என்றால் அன்றைய ரஜினிகாந்த் படங்களுக்கு எவ்வளவு கலெக்சன் வருமோ அந்த அளவுக்கு இணையான கலெக்சனை “செந்தூரப்பூவே” வசூல் செய்திருக்கிறது. இது ரஜினிகாந்த்திற்கு வயிற்றில் புளியை கரைத்ததாம். அந்த அளவுக்கு வெற்றிப்படமாக “செந்தூரப்பூவே” திரைப்படம் அமைந்ததாம். ஆனால் திரைப்படத்தில் வயதான கதாப்பாத்திரம் என்பதால் முதலில் விஜயகாந்த் நடிப்பதற்கு தயங்கினாராம். படம் வெளியான பின் கிடைத்த வரவேற்பை பார்த்து “இந்த படத்தில் நடிப்பதற்கா தயங்கினோம்” என வருந்தினாராம்.

 

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.