Cinema History
பொன்னியின் செல்வன் ப்ரீ ரிலீஸ் ஈவண்டில் ஆட்டம் போட்ட ஜெயம் ரவி, சுவாரசியமாய் பேசிய கார்த்தி
பொன்னியின் செல்வன் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் பெங்களுூருவில் நடந்தது. இதில் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்த ஜெயம் ரவி மனநிறைவுடன் பேசிய வார்த்தைகள் தான் இவை.
ரொம்ப கஷ்டப்பட்டு பண்ணியிருக்கோம். இந்த டீம் இல்லன்னா நடக்கவே நடக்காது. கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய். இதெல்லாம் தாண்டி மணிரத்னம் மாஸ்டர் இல்லன்னா நடக்கவே நடக்காது. அவரு ரொம்ப முக்கியமா இந்தக் கேரக்டர்ல நீ தான் நடிக்கணும்னு சொன்னதை மறக்கவே முடியாது. குறிப்பா எல்லாரும் செப்.30ல் தியேட்டர்ல போயி பாருங்க.
பெங்களூருல ஒரு ரெஸ்டாரண்ட்டுக்குப் போயிருந்தேன். அங்க இருக்குற ஓனர் என்னை வரவேற்று மாலையெல்லாம் போட்டு நல்லா கவனிச்சாங்க. அந்த அன்பை என்னால மறக்கவே முடியாது. அப்ப தான் நான் நடிகனாக ஆகியிருக்கேன் என்பதையே உணர்ந்தேன்.
அருண்மொழி வர்மன் என்ற அந்தக் கேரக்டருக்கு உயிர் கொடுத்தவர் மணிரத்னம். ராஜராஜசோழன்னு சொன்னாலும் அதுதான். மணி சார் ஏன் இந்த முக்கியமான ரோல நம்மக் கிட்ட கொடுக்கிறாருன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன். அதுக்கு அப்புறம் நான் யோசிச்சேன். அவரே யோசிக்கல.
நம்ம எதுக்கு யோசிக்கணும்னு. அவர் என்ன சொன்னாரோ அதை அப்படியே ஃபாலோ பண்ணினேன். எல்லோரையும் சந்தோஷப்படுத்த முடியவே முடியாது. ஆனா சந்தோஷப்படுத்தி ஆகணும். எல்லார்க்கிட்டயும் நல்ல பேரு எடுக்கணும். கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் அவனதுதான்.
அவன் கட்டுன அணைகள் தான் என்னைக்குமே உலகத்துல நிலைச்சி நிக்கப் போற அணைகள். அப்படின்னு சொல்லி நிறைய எனக்கு ஊக்கத்தைக் கொடுத்தாரு. நீ கட்டுனது தான் அந்த அணை. அந்த டயலாக் எல்லாம் எனக்கு ஒரு உந்து சக்தியைக் கொடுத்தது. நான் நல்ல பண்ணியிருக்கேன்னு நம்புறேன்.
ஜெயம் ரவியை ஒரு ஆட்டம் போடுங்கள் என்று சொன்னதும் ஆடி விட்டுப் போனார்.
கார்த்தி பேசுகையில், 2 வருஷமா இந்தப்படத்துல நடிச்சிருக்கேன். ரொம்ப ஸ்பெஷலான கேரக்டர். இந்தப்படத்துல நம்ம வரலாறும் சேர்ந்து வருது. இன்னொரு ஸ்பெஷல். மணிசாருடைய ட்ரீம் ப்ராஜெக்ட்.
40 வருஷம் கழிச்சி எடுத்து முடிச்சிருக்காரு. மல்டி ஸ்டார் பிலிம் எனக்கு முதல் தடவை. வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்துள்ளேன். ஒரு பிளே பாய் கேரக்டர். திரிஷா, ஐஸ்வர்யாராயைப் பார்ப்பேன். ப்ளோட்டிங் கேரக்டர்.
இந்த நிகழ்ச்சியில் விக்ரம், திரிஷா, மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.