
ஆவடி அருகே லிப்ட் தருவது போல ஏமாற்றி அழைத்துச் சென்று மாணவனிடம் அத்துமீறிய டிரைவரைப் பொதுமக்கள் அடித்து வெளுத்துள்ளனர்.
ஆவடி அருகே உள்ள வெள்ளனூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் செல்லத்துரை. இவர் கன்னடபாளையம் எனும் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த மாணவனிடம் லிப்ட் தருவதாக சொல்லி அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அவனை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் யாரும் இல்லாத இடம் ஒன்றில் நிறுத்தி அவனிடம் பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்துள்ளார். இதனால் பயந்த அந்த சிறுவன் கத்தி கூப்பாடு போட்டுள்ளான். அதைக் கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் அங்கு வந்து மாணவனிடம் விசாரித்துள்ளனர். மாணவன் நடந்ததை சொன்னதும் செல்லத்துரையை தர்ம அடிக் கொடுத்து போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.



