பிரபலங்கள் பலருக்கும் ஒரே படத்தில் திடீர் வாய்ப்பால் பெரிய புகழை அடைய வேண்டும் என்ற ஆசை அதிகமாக தான் இருக்கும். ஆனால், அது பலருக்கும் நடப்பதில்லை. சிலருக்கு ஒரே நாளில் மொத்த நடிப்பு வாழ்க்கையும் இல்லாமல் கூட போகலாம். அப்படி தங்கள் சினிமா வாழ்வை மிஸ் செய்த சிலர் உங்களுக்காக.
அப்பாஸ்:
தமிழ் சினிமாவில் மிக எளிதாக எண்ட்ரி கொடுத்தவர். கதிர் இயக்கத்தில் காதல் தேசம் படத்தில் அறிமுகமானவர். எண்ட்ரி ஈசியாக இருந்ததால் சரியான படத்தை இவரால் சூஸ் செய்ய முடியவில்லையாம். புகழ்பெற்ற ஜீன்ஸ் படத்தில் முதலில் இவருக்கு தான் வாய்ப்பு வந்தது. என்னால் ஒரு வருடம் எல்லாம் ஒரு படத்திற்கு தரமுடியாது எனக் கூறி மறுத்துவிட்டாராம். அதுமில்லாமல் தொடர்ந்து மொக்கை படங்களில் நடித்தார். இதனால் இவரை வைத்து யாரும் இயக்க முன்வராத நிலையில் தற்போது சினிமாவிற்கே குட்பை சொல்லிவிட்டார்.

அசின்:
தமிழ் சினிமாவில் அறிமுகமான அசினுக்கு செம வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, கஜினி என பல வெற்றி படங்கள் அமைந்தது. இதை தொடர்ந்து இவருக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, சல்மான்கான் நடிப்பில் ரெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார். அப்போது, தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையே பெரிய பிரச்சனை நடந்தது. ரெடி படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடக்க இருந்தது. அதனால் பலரும் அசினை அந்த படத்தில் இருந்தும் விலகுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் அசினோ எனக்கு என் கேரியர் தான் முக்கியம். நான் போவேன் எனக் கூறினார். நீ அப்படியே போமா எனக் கூறி கோலிவுட் மொத்தமாக வாய்ப்புகளை நிறுத்தியது.

அமலா பால்:
தமிழ் சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார். பண்ணவர் அப்படியே ஒழுங்காக இருந்து கொஞ்ச வருடம் கழித்து வந்தாலும் ரசிகர்கள் ஏற்று கொண்டு இருப்பர். ஆனால், தனுஷின் பேச்சை கேட்டு உடனே நடிக்க வர அது பெரிய விமர்சனத்துக்கு ஆளானது. இதனால் தனது வாழ்க்கை போனது மட்டுமல்லாமல் கேரியரும் காலி.
இதையும் படிங்க: ரீ என்ட்ரி கொடுத்தும் பிரயோஜனம் இல்ல… சுத்தமா செல்ஃப் எடுக்காத டாப் நடிகர்கள்…

மோகன்:
மைக் மோகன் என செல்லமாக அழைக்கப்பட்டவர். மாஸ் நடிகராக இருந்தாலும் இவர் அந்த கால லவ்வர் பாய் என்கின்றனர். இவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து கொண்டிருந்த சுரேந்தர் இவருக்கு வாய்ஸ் கொடுப்பதை நிறுத்தினார். இதனால் தனது ஒரிஜினல் வாய்ஸில் பேசினார். அய்யோ என்னடா இது குரலு என்ற ரீதியில் பெண் ரசிகைகள் தெறித்து ஓடினர். அதுவே இவர் புகழை பலவாறு கெடுத்தது. மேலும், மொக்க படங்களை சூஸ் செய்ய அய்யாவை வெளியேற்றது கோலிவுட்.

பிரசாந்த்:
நடிகர் தியாகராஜனின் மகன். பெரிய அறிமுகத்துடன் வந்தாலும், தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி இருந்தார். பெண் ரசிகைகள் இவருக்கு அதிகம். தொடர்ந்து, பல வாய்ப்புகள் வந்ததால் கதையை கூட கேட்காமல் ஓகே எனச் சொல்லிவிடுவாராம். இதனால் பல படங்கள் பல்ப் வாங்கியது. இதுவே அவருக்கு பெரிய சறுக்கலை கொடுத்தது. தொடர்ந்து திருமண சிக்கலால் பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கவில்லை. மனுஷனும் படப்பிடிப்புக்கு வருவதற்கு பதில் கோர்ட் படியேறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

