Cinema News
சிம்புவுக்கு கார்?…வெங்கட் பிரபுவுக்குத்தான் கொடுத்துருக்கனும்… உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்..
Published on
சிலம்பரசன் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்யப்பட்டது.
இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தது. ஆனால் சிம்பு இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என பாராட்டுக்கள் குவிந்தன. இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், பவா செல்லதுரை, சித்திக் என பலரும் நடித்திருக்கின்றனர்.
“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. குறிப்பாக “மல்லிப்பூ” பாடல் உலகம் முழுவதும் வேற லெவலில் ரீச் ஆகியுள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. மேலும் இத்திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு சிம்புவுக்கு ஒரு விலை உயர்ந்த காரையும், கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஒரு விலை உயர்ந்த பைக்கையும் பரிசாக வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
அதே போல் இத்திரைப்படத்திற்கு மறைமுகமாக ஒவ்வொரு நாளும் புரோமோட் செய்த? கூல் சுரேஷுக்கு ஒரு ஐ ஃபோனையும் பரிசாக வழங்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், “நியாயமாக ஐசரி கணேஷ் கார் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்றால் வெங்கட் பிரபுவுக்குத்தான் வாங்கிக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் மாநாடு தான் மெகா ஹிட். அந்த ஹிட்டை வைத்து தான் இந்த சிம்பு படத்தை நன்றாக பிசினஸ் செய்துவிட்டார் ஐசரி கணேஷ்” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் “ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே ஓடிடி, சேட்டலைட் உரிமத்தில் மிகப்பெரிய லாபத்தை பார்த்துவிட்டார். ஆனால் திரையரங்குகளில் வெந்து தணிந்தது காடு லாபத்தை கொடுக்கவில்லை. வெளியீட்டிற்கு முன்பான ஓடிடி, சேட்டலை உரிமத்தில் அவர் 20 கோடி ரூபாய் லாபம் பார்த்துவிட்டார்” என கூறியதும் குறிப்பிடத்தக்கது.
சிம்பு நடித்த “மாநாடு” திரைப்படம் சிம்புவின் மார்க்கெட்டை ஏற்றிய திரைப்படம். இத்திரைப்படத்தை வைத்து தான் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை நல்லபடியாக பிசினஸ் செய்துவிட்டார் என அந்தணன் கூறுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் அமிர்தாவிடம் எனக்கு இன்னும் சில கடமைகள் இருக்கு அது முடித்தவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்....
நடிகை திரிஷாவின் 41வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு லைகா நிறுவனம் போட்டுள்ள வாழ்த்துக்கள் ட்வீட்டை பார்த்தா...
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்துவை குடிகாரன் என சித்தரித்த வீடியோவை சத்யா மீனாவுக்கு காட்டுகிறார். அதில் முத்துவை பற்றி தப்பாக...
டைரக்டர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் ப்ரீ...
சுந்தர் சி இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த ஆண்டு மலையாள...