வடிவேலு வீட்டில் கல் எறிந்தது அந்த 8 நடிகர்கள்தான்- லிஸ்ட் போட்டு காட்டிய விஜயகாந்த்…

Published on: September 29, 2022
---Advertisement---

வடிவேலு-பார்த்திபன், வடிவேலு-கோவை சரளா காம்போக்களை அடுத்து ரசிகர்களை மிகவும் கவர்ந்த காமெடி காம்போ என்றால் அது விஜயகாந்த்-வடிவேலு காம்போதான்.

“சின்ன கவுண்டர்”, “எங்கள் அண்ணா”, “தவசி” என பல திரைப்படங்களில் இவர்களது காம்போ காமெடியில் வெளுத்து வாங்கியது. ஆனால் கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலின் போது வடிவேலு விஜயகாந்திற்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்தார்.

இவர்களுக்கு இடையேயான உரசல் என்பது அந்த தேர்தலில் தொடங்கியது அல்ல. அதற்கும் பல வருடங்களுக்கு முன்பே இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாள் விஜயகாந்த் வீட்டிற்கு வந்தவர்கள் வடிவேலுவின் அலுவலகம் முன்பு காரை நிறுத்தியதாக மோதல் எழுந்தது. இதனை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு வடிவேலு வீட்டில் கல் எறி தாக்குதல் நடந்தது.

இச்சம்பவத்தை தொடர்ந்து வடிவேலு, விஜயகாந்தின் மீது குற்றச்சாட்டு வைத்தார். அதாவது “விஜயகாந்த் ஆட்கள் தான் எனது வீட்டில் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர்” என கூறினார். வடிவேலுவின் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து விஜயகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுத்தனர்.

அப்போது விஜயகாந்த்” இந்த கல் எறி தாக்குதலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என கூறினார். இதன் பிறகு நடந்த சம்பவத்தை மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அதாவது விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தபின், அவருக்கு நெருக்கமானவர்களிடம் “நம் ஆட்கள் இந்த கல் எறி தாக்குதலை நடத்தவில்லை. ஆனால் இந்த 8 நடிகர்களில் ஒருவரின் ரசிகர்கள் தான் வடிவேலு வீட்டில் கற்களை எறிந்திருக்கிறார்கள்” என அந்த 8 நடிகர்களின் பெயரையும் கூறியிருக்கிறார்.

உடனே அங்கிருந்தவர்கள் “நீங்களே இதனை பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கலாமே” என கூறியிருக்கின்றனர். ஆனால் அதற்கு விஜயகாந்த் “நம்மால் இன்னொரு நடிகருக்கு சங்கடம் வரக்கூடாது. பாவமோ பழியோ நம் மீது விழுந்துவிட்டு போகட்டும்” என கூறியிருக்கிறார்.

மேலும் “அந்த நடிகர் தமிழின் முன்னணி நடிகராக திகழ்கிறார். அவருக்கு இங்கே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு” அப்பேட்டியில் மீசைய் ராஜேந்திரன் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.