
பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்கள் நடித்த திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்கி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இன்னொரு பிரபல நடிகரின் படத்தையும் சன் டிவி வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தை ’கோலமாவு கோகிலா’ நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலமாவு கோகிலா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் வைத்து நெல்சன் இயக்கி வரும் இந்த படம் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய், யோகிபாபு, கலையரசன், உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
Satellite rights of our #DOCTOR⚕️ has been bagged by @SunTV #DoctorWithSunTV@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @Nelson_director | @priyankaamohan | #Vinay | @yogibabu_offl | @anirudhofficial | @EzhumalaiyanT | @kjr_studios | @DoneChannel1 | @proyuvraaj | @DoctorTheMovie pic.twitter.com/9eGTfu8rku
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) February 7, 2020