வீட்டுக்குழாய்களில் வந்த சாராயம் – நம்ப முடியவில்லையா ஆனால் நிஜம்!

Published on: February 7, 2020
---Advertisement---

5ceba9ae0e41086904427da530fd7a0c

ரளாவில் வீட்டுக்குழாய்களில் தண்ணீருக்குப் பதில் சாராயம் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் முறைகேடாக அல்லது கடத்தப்பட்ட சாராயங்களை கைப்பற்றி வைத்திருந்த கலால்துறை அவற்றை அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளது. வழ்க்கமாக இதுபோன்றவற்றை எரித்துவிடும் கலால்துறை இம்முறை அதை குழிதோண்டி புதைக்க முடிவு செய்துள்ளது. காரணம் ஏன் வீணாக காற்று மாசுபாட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கறைதான்.

ஆனால் இந்த யோசனை பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. தங்கள் வசம் 6000 லிட்டர் மதுவகைகளை ஆழமாகக் குழிதோண்டி ஒரு இடத்தில் புதைத்துள்ளது. ஆனால் அந்த மது அங்கிருந்த குடிநீர் குழாயில் கலந்துள்ளது. இதுதான் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளின் குழாய்களில் வர ஆரம்பித்துள்ளது. இதனால் குழப்பங்கள் உண்டாகவே பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்காலிகமாக தண்ணீர் வழங்கியுள்ளது கலால்துறை.

மக்களின் புகாரை ஏற்றுக்கொண்ட நகராட்சித்துறை விரைவில் இது சம்மந்தமாக மாற்று ஏற்பாடுகளை செய்யவுள்ளது.

Leave a Comment