Cinema News
ரசிகர்களை கண்ணீர் விட வைத்த டாப் 5 படங்கள்… நீங்க மிஸ் பண்ணாம பாருங்க…
கோலிவுட்டில் சில படங்கள் முடியும் போது ரசிகர்கள் கண்ணீருடன் வெளியேறுவர். அது எல்லா படங்களில் நடக்கவில்லை என்றாலும் ஒரு சில படங்களில் மொத்த கூட்டத்தையும் அழவைத்தே தீருவர்.
விண்ணைத் தாண்டி வருவாயா:
அழகான காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படத்தில் அதிகம் ரசிக்கப்பட்ட கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி கடைசியில் பிரிந்து விடுவர். ஒவ்வொரு முறை இப்படத்தினை பார்க்கும் ரசிகர்களும் சேர வேண்டும் என நினைக்கும் அளவுக்கு இப்படம் அமைந்து இருக்கும். ஜெஸ்ஸி எழுந்து செல்லும் போது பலரின் கண்ணீர் தரை தொட்டு விடும்.
கத்தி:
விஜய் நடிப்பில் அதிக சர்ச்சையை சந்தித்த படம். அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இன்றும் பலருக்கு கண்ணீரில் தான் முடியும். அதுக்கு முக்கிய காரணம், அங்கு இடம்பெற்று இருந்த யார் பெற்ற மகனோ என்ற பாடல் தான்.
இயற்கை:
ஏன் இப்படி பண்ணீங்கனு? பலரையும் கதற வைத்த படம் இயற்கை தான். தேவையில்லாமல் எதுவும் செட் போடாமல் படத்திற்கு ஏற்றது போல இயற்கையாகவே அமைந்து இருந்தது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஹீரோ ஏமாந்தது போல ரசிகர்களும் ஏமாற்றத்துடன் கண்ணீர் வடித்தனர்.
இதையும் படிங்க: சீச்சீ.. அந்த பழக்கமெல்லாம் எங்களுக்கு இல்ல… சத்தியம் செய்யும் டாப் நடிகர்கள்
அன்பே சிவம்:
சுந்தர்.சி இயக்கத்தில் உருவான இப்படம் கமலின் நடிப்பில் மெருமேறி இருந்தது. படத்தில் லவ், ஆக்ஷன் மட்டும் வெல்லாது நடிப்பும் முக்கியம் என்பதை நிரூபித்த படம். அதிலும், கிளைமேக்ஸ் காட்சியில் கமல் தனது நாயுடன் நடந்து செல்லும் போது தியேட்டரில் கண்ணீர் ஆறு தான்.
96:
த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் 96. சின்ன வயதில் துவங்கிய காதல் வளர்ந்தும் அவர்கள் மனதில் இருக்கும். ஒரு சின்ன தவறால் அவர்களால் வாழ்வில் இணைய முடியாது. த்ரிஷாவிற்கு திருமணம் ஆகிவிடும். பள்ளி விழாவில் சந்திக்கும் அவர்கள் ஒரு நாள் அழகாக தங்கள் நாளை கழிப்பர். அதிலும், மற்ற படங்கள் போல் அல்லாமல் எந்தவித முத்த காட்சியும் இல்லாமல் த்ரிஷா சொல்லும் காட்பாய் தான். விஜய் சேதுபதியை மட்டுமல்லாமல் எல்லாரையுமே அழ வைத்து விடுவார்கள்.