பாஜக போராட்டத்திற்கு பதிலடி கொடுக்க குவிந்த விஜய் ரசிகர்கள்: நெய்வேலியில் பரபரப்பு

Published on: February 7, 2020
---Advertisement---

af548a17784798459fb83da614d0d068-2

இந்த நிலையில் விசாரணைக்கு பின்னர் மீண்டும் இன்று விஜய், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இன்று காலை முதல் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி சுரங்கத்தில் பிரச்சனை இன்றி நடைபெற்று வந்த் நிலையில் இன்று மாலை திடீரென பாஜகவினர் ஒரு சிலர் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்

என்எல்சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கூடாது என்று அவர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த செய்தி அறிந்த உள்ளூர் விஜய் ரசிகர்கள் திடீரென அந்த பகுதியில் குவிந்து போராட்டம் செய்த பாஜகவினர்களுக்கு எதிராக கோஷமிட்டதாக கூறப்படுகிறது.

பாஜகவினர் வெறும் 15 பேர்கள் மட்டுமே போராட்டம் செய்த நிலையில் நூற்றுக்கணக்கில் விஜய் ரசிகர்கள் குவிந்து வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது

Leave a Comment