
விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு என்எல்சி சுரங்கத்தில் நடைபெற்று வந்த நிலையில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்று விசாரணை செய்தனர் என்பது தெரிந்ததே.
இந்நிலையில் இன்று விஜய் மீண்டும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இன்று காலை முதல் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி சுரங்கத்தில் பிரச்சனை இன்றி நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலை திடீரென பாஜகவினர் ஒரு சிலர் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். என்எல்சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கூடாது என்று அவர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த செய்தி அறிந்த உள்ளூர் விஜய் ரசிகர்கள் திடீரென அந்த பகுதியில் குவிந்து போராட்டம் செய்த பாஜகவினர்களுக்கு எதிராக கோஷமிட்டதால் பாஜகவினர் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பாஜகவினர் வெறும் 15 பேர்கள் மட்டுமே போராட்டம் செய்த நிலையில் நூற்றுக்கணக்கில் விஜய் ரசிகர்கள் குவிந்து வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
எனவே, அந்த பதட்டத்தை தணிக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியே வந்த நடிகர் விஜய் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் தனது கைகளை அசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார். அவரை கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்து அண்ணா… அண்ணா.. தலைவா.. தளபதி.. கத்தினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
நெய்வேலி #NLC யில் #MASTER படப்பிடிப்பில் இருந்த நடிகர் @actorvijay ரசிகர்களை சந்தித்தார். பாஜக போராட்டம், ரசிகர்களின் பதில் போராட்டம், விரட்டிஅடிப்பு என படப்பிடிப்பு தளம் பரபரப்பாக இருந்தது. ரசிகர்களை சமாதானம் செய்தார் விஜய். #Vijay #ITRaid #BJP @News18TamilNadu pic.twitter.com/3KZj5Fi98e
— Mahalingam Ponnusamy (@mahajournalist) February 7, 2020