Connect with us

Cinema News

நம்பியார் வீட்டு சாப்பாட்டால் தெறித்து ஓடிய இயக்குனர்… ஐய்யோ இப்படியா!

தமிழ் சினிமாவின் வில்லன் நடிகராக இருந்த நம்பியார் எப்போதுமே தனது வீட்டு சாப்பாட்டினை தான் சாப்பிடுவாராம். அதில் சில ரகசியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

60ஸ்களில் நடிகராக திரை வாழ்வினை துவங்கியவர் நம்பியார். நாயகனாக துவங்கினாலும் அவருக்கு ரசிகர்களிடம் அதீத ஆதரவு கிடைக்கவில்லை. அந்த சமயத்தில், அவருக்கு வில்லன் வாய்ப்புகள் வந்தது. அதை சற்று தயத்துடன் தான் நம்பியார் ஏற்றுக்கொண்டார். ஆனால் அதுதான் அவரின் சினிமா வாழ்க்கைக்கே மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது.

நம்பியார்

தொடர்ந்து, பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தார். 1996ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான படம் பூவே உனக்காக. இத்திரைப்படத்தில் விஜய், சங்கீதா, நம்பியார் மற்றும் நாகேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: நம்பியார் யாருக்கும் உதவி செய்யமாட்டார்… ஏன் தெரியுமா?

அந்த சமயத்தில், சூட்டிங்கில் நம்பியார் சாப்பிடவே மாட்டாராம். அவருக்கென தனியாகவே சாப்பாடு வருமாம். இதினை கவனித்த விக்ரமன், என்ன சார் உங்களுக்கு மட்டும் தனி சாப்பாடு. எங்களுடன் சாப்பிடலாமே? என்றாராம். நம்பியாரோ அதில் ஒரு ரகசியமப்பா எனக் கூற, விக்ரமன் போங்க சார் எங்கள ஒதுக்குறீங்களா எனக் கேட்டே விட்டாராம்.

இப்படி இருக்க, அவருக்கு அடுத்த நாள் சாப்பாடு வந்திருக்கிறது. உடனே நம்பியார், இயக்குனரை கூப்பிடுப்பா என்றார். விக்ரமன் வந்தவுடன் வாங்க சாப்பிடலாம் என நம்பியார் அழைத்திருக்கிறார். ஓ தாராளமா சாப்பிடலாம் என்றாராம். ஆனால், சாப்பிடும் போது வேண்டாம் எனக் கூறவே கூடாது என்ற கண்டிஷனும் உட்கார வைத்தார். விக்ரமனுக்கு இவரே பரிமாறி இருக்கிறார். அதை சாப்பிட்ட, விக்ரமனுக்கு நெஞ்சே அடைத்து விட்டதாம். சாப்பாட்டில் உப்பு, புளி, காரம் என எதுவுமே இல்லையாம். அத்தனை கசப்பான சாப்பாட்டை தான் நம்பியார் சாப்பிடுவார். இதை சாப்பிட்ட விக்ரமன் ஒரு நாள் முழுதும் அதிக சீனியினை போட்டு வெறும் டீயினை மட்டுமே குடிக்க முடிந்ததாம்.

Continue Reading

More in Cinema News

To Top