
நடிகை சாய் பல்லவி போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட 30 அண்டர் 30 என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
நடிகை சாய்பல்லவி பிரேமம் படத்தில் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தின் மூலமாக தென் இந்தியா முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் எதுவும் அந்த அளவுக்கு ஹிட் ஆகவில்லை. அதை அடுத்து தனுஷுடன் அவர் நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூட்யூப்பில் மெஹா ஹிட் ஆனது. யுட்யூபில் அதிக நபர் பார்த்த பாடலாக ரௌடி பேபி உள்ளது.
இந்நிலையில் பிரபல பத்திரிக்கையான போர்ப்ஸ் வெளியிட்டுள்ள 30 அண்டர் 30 என்ற பட்டியலில் சாய் பல்லவி இடம்பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 பெண்களில் சாய்பல்லவியும் ஒருவர் என்ற பெருமை கிடைத்துள்ளது.