ஆதித்யா வர்மாவில் விக்ரம் நடித்தாரா? சொல்லவே இல்லை… துருவ் வெளியிட்ட வீடியோ

Published on: February 8, 2020
---Advertisement---

c6a223b7af418d89aea9c9e41aeb29aa

ஆனால், பாலா இயக்கிய விதம் பிடிக்காமல் போக வேறு இயக்குனரை வைத்து ‘ஆதித்ய வர்மா’ என்கிற பெயரில் அப்படம் மீண்டும் எடுக்கப்பட்டு வெளியானது. அப்படத்திற்கு பின் வேறு எந்த படத்திலும் துருவ் நடிக்கவில்லை.

துருவ் அமெரிக்காவில் நடிப்பு பயிற்சி பெற்றவர். எனவே, தற்போது மீண்டும் அவர் வெளிநாடு சென்றுவிட்டார். அங்கு சில பயிற்சிகளை முடித்த பின் மீண்டும் சென்னை திரும்பி அவர் சினிமாவில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆதித்யா வர்மா படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் விக்ரம் நடித்த வீடியோவை துருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். துருவ் அமர்ந்திருக்க அங்கு வரும் விக்ரம் ‘உன்னை பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள்’ என ஆங்கிலத்தில் கூற, துருவ் எழுந்து செல்வது போல் காட்சி அமைந்துள்ளது. இதைப்பகிர்ந்து, சியானோடு மறக்க முடியாத அனுபவம் என துருவ் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், விக்ரம் நடித்த அந்த காட்சி திரைப்படத்தில் இடம் பெறவில்லை. இதைக்கண்ட நெட்டிசன்கள் நீங்கள் சிறப்பாக நடித்தாலும் நடிப்பில் உங்கள் அப்பாவை ஜெயிக்க முடியாது என பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment