
Cinema News
இசையமைக்க மறுத்த பிரபல இசையமைப்பாளர்… தங்கக்காசுகளை தலையில் கொட்டி அதிரவைத்த சின்னப்பா தேவர்… அடேங்கப்பா!!
Published on
1967 ஆம் ஆண்டு சாண்டோ சின்னப்பா தேவர் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் “தெய்வச்செயல்”. இத்திரைப்படத்தை எம் ஜி பாலு இயக்கியிருந்தார். இதில் மேஜர் சுந்தரராஜன், ஆர் முத்துராமன் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மிகவும் சுமாராகவே ஓடியது.
எனினும் சாண்டோ சின்னப்பா தேவர் இத்திரைப்படத்தை ஹிந்தியில் தயாரிக்க முடிவு செய்தார். நேராக பாம்பேக்கு கிளம்பிய சின்னப்பா தேவர், அப்போது ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜேஷ் கண்ணாவை சந்தித்தார். ஒரு பெரிய தொகையை காட்டி ராஜேஷ் கண்ணாவை மயங்கவைத்தார் சின்னப்பா தேவர். அதன் பின் நடிகை தனுஜா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இத்திரைப்படத்திற்கு “ஹாத்தி மேரே சாத்தி” என்று டைட்டிலும் வைக்கப்பட்டது.
இத்திரைப்படத்திற்கு யாரை இசையமைக்க வைக்கலாம் என ஹிந்தி சினிமா உலகில் விசாரித்தபோது, அப்போது பாலிவுட்டில் டாப் இசையமைப்பாளர்களாக இருந்த லட்சுமிகாந்த்-பியாரிலால் பெயரை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் லட்சுமிகாந்த்-பியாரிலால் மிகவும் பிசியாக இருந்தனர். அவர்களின் கைவசம் பல திரைப்படங்கள் இருந்தது. ஆதலால் அவர்களை ஒப்பந்தம் செய்வது மிகவும் கடினம் என கூறியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் சின்னப்பா தேவருக்கு கார் ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் லட்சுமிகாந்த்-பியாரிலால் வீட்டில் அவர்களின் மகன் ஒருவருக்கு பிறந்தநாள் விழா ஒன்று நடக்கிறது, அந்த விழாவுக்கு செல்வதாக கூறியுள்ளார். சிந்தித்த சின்னப்பா தேவர் தானும் அங்கு செல்ல முடிவுசெய்தார்.
லட்சுமிகாந்த்-பியாரிலால் வீட்டிற்கு சென்றபின் அங்கு பிறந்தாள் கொண்டாடிக்கொண்டிருந்த பையனை பார்த்த சின்னப்பா தேவர் 50 தங்க காசுகளை அந்த பையனின் தலையில் கொட்டியிருக்கிறார். இதனை பார்த்த லட்சுமிகாந்த்-பியாரிலால் ஷாக் ஆகியுள்ளனர்.
இதற்கு அடுத்த நாள், லட்சுமிகாந்த்-பியாரிலால் வீட்டில் இருந்து சின்னப்பா தேவருக்கு தொலைப்பேசி வந்திருக்கிறது. “உங்கள் திரைப்படத்திற்கு எப்போது கம்போஸிங் வைத்துக்கொள்ளலாம்” என அவர்களே கேட்டார்களாம். எப்படியெல்லாம் வலைத்துப்போட்டிருக்கிறார் சின்னப்பா தேவர் என்று பார்த்துக்கொள்ளுங்கள்!!
Kantara 2 : ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான காந்தாரா திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு,...
Manikandan: எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்து போராடி பல வேலைகளை செய்து...
Ajith: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. மனைவி ஷாலினி கேட்டுக்...
Idli kadai: பாக்கியராஜின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே...
Idli kadai Review: தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இதற்கு முன்...