Cinema History
ஜெயலலிதாவை நம்பியார் எப்படி அழைப்பார் தெரியுமா? ஏன் இவ்வளவு ஸ்பெஷல்…
தமிழ் சினிமாவில் வெற்றி நாயகியாக இருந்த ஜெயலலிதாவிற்கும், வில்லன் நடிகரான நம்பியார் இருவருக்கும் இருந்த நட்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழில் வெண்ணிற ஆடை படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் புரட்சி தலைவி ஜெயலலிதா. தொடர்ந்து, தமிழ், ஆங்கிலம், கன்னடம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் எம்.ஜி.ஆருடன் ஏறத்தாழ 28 படங்களிலும் நடித்துள்ளார். அப்போது வில்லன் நடிகராக இருந்த நம்பியாருக்கும் இவருக்கும் ஒரு நட்பு இருந்ததாம்.
தமிழ் சினிமாவில் நாயகியாக இருந்த ஜெயலலிதாவிற்கு திடீரென நம்பியார் வீட்டில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. உடனே கிளம்பியவருக்கு, அவருக்கு பிடித்தமான உணவுகளை தயார் செய்து வைத்து காத்திருந்தார்களாம் நம்பியாரும் அவரது மனைவியும். ஜெயலலிதாவினை உட்கார செய்து, வெள்ளித் தட்டில் அவருக்கு உணவு பரிமாறியிருக்கிறார் நம்பியார். தனக்கு இத்துணை மரியாதை கொடுத்த நம்பியாரை ஜெயலலிதாவால் மறக்க முடியவில்லை.
பின்னொரு நாளில், ஜெயலலிதா தமிழக முதல்வரானதும் நம்பியார் மற்றும் அவரது மனைவியை தனது வீட்டுக்கு அழைப்பு விடுத்தார். இருவருக்கும் மதிய உணவிற்கு சடபுடலாக விருந்து செய்யப்பட்டது. அப்போது, நம்பியாரை உட்கார வைத்து வெள்ளி தட்டிலே உணவுகளை பரிமாறினாராம் ஜெயலலிதார். எனக்கு நீங்க கொடுத்த அதேப்போல வெள்ளி தட்டு தான் எனக் கூறியிருக்கிறார். இரு சம்பவத்திற்கும் பல வருட இடைவேளை இருந்ததாம்.
இதையும் படிங்க: நம்பியார் வீட்டு சாப்பாட்டால் தெறித்து ஓடிய இயக்குனர்… ஐய்யோ இப்படியா!
இதனால், நம்பியார் தனது திரையுலக சகாக்களிடம் அம்மு எதையும் மறப்பது இல்லை. எல்லாத்தையும் அப்படியே ஞாபகம் வைச்சிருக்கு..” என்று சொல்லிச் சொல்லி பாராட்டினாராம். இதை தொடர்ந்தே பலருக்கு நம்பியார், ஜெயலலிதாவை அம்மு என அழைக்கும் விஷயமே பலருக்கு தெரிந்தது.