மனோரமாவை தொட்டு தொட்டு நடித்த நாகேஷ்… கடுப்பாகிப்போன நடிகையின் தாயார்…

Published on: October 13, 2022
Nagesh Manorama
---Advertisement---

தமிழ் சினிமாவில் மக்களின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கும் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து வருபவர் நாகேஷ். நாகேஷ் அவர் நடித்து வந்த காலத்தில் கொடி கட்டி பறந்தாலும், அவரின் தொடக்க காலத்தில் பல அவமானங்களை சந்தித்து வந்திருக்கிறார்.

நாகேஷ் “சர்வர் சுந்தரம்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்கு முன்பு பல திரைப்படங்களில் அவர் நடித்தார். அப்படி அவர் நடிப்பில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் “நாகமலை அழகி”.

Nagesh
                                                                                                       Nagesh

இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, நாகேஷ், மனோரமா என பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில்தான் நாகேஷ் முதன்முதலில் மனோரமாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவத்தை குறித்து சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

Nagesh and Manorama
                                                                                            Nagesh and Manorama

இத்திரைப்படத்தில் நாகேஷ் மனோரமாவை தொட்டு தொட்டு நடிப்பது போல் பல காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது மனோரமாவை அழைத்த அவரது தாயார், “அந்த பையன் உன்னைய என்ன தொட்டு தொட்டு நடிக்கிறான்” என கோபப்பட்டுள்ளார். மேலும் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது மனோரமாவிடம் அவரது தாயார் அடிக்கடி இது குறித்து புலம்பிக்கொண்டே இருந்தாராம்.

Nagesh and Manorama
                                                                                                  Nagesh and Manorama

இதை எல்லாம் கேட்டுக்கொண்டே இருந்த மனோரமா, ஒரு முறை அவரது தாயாரிடம் “உனக்கு நாகேஷை பற்றித் தெரியாது. அவர் மிகப்பெரிய திறமைசாலி. இந்த சினிமா உலகில் இவர் உச்சத்துக்குச் செல்லப்போகிறார். இதனை நீ நிச்சயமாக பார்ப்பாய்” என கூறியிருக்கிறார்.

அவர் சொன்னதைப்போலவே நாகேஷ் பின்னாளில் உச்ச நட்சத்திரம் ஆனார். அதுமட்டுமல்லாது அதன் பின் மனோரமாவுடன் நாகேஷ் பல திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.