ரஜினியை ஸ்டைலாக சிகரெட் பிடிக்க சொன்ன சிறு வயது பெண்… அது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…

Published on: October 13, 2022
Rajinikanth
---Advertisement---

ரஜினிகாந்த் சிகரெட் பிடிப்பது போல் இப்போதெல்லாம் நடிப்பதில்லை என்றாலும், பல வருடங்களுக்கு முன் அவர் நடித்த பல திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்துள்ளார். மிகவும் ஸ்டைலாக அவர் சிகரெட் பிடிக்கும் முறை இளைஞர்கள் பலரையும் கவர்ந்தது.

Rajinikanth
Rajinikanth

எனினும் இது ஒரு கட்டத்தில் பெரும் சர்ச்சையும் ஆனது. ரஜினி சிகரெட் பிடிப்பதை பார்த்து பல இளைஞர்கள் கெட்டுப்போகிறார்கள் என பல பேச்சுக்கள் கிளம்பின. குறிப்பாக ரஜினி தனது திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் பலர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் “பாபா” திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த எந்த திரைப்படத்திலும் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கவில்லை. அதற்கு மாறாக “பேட்ட” திரைப்படத்தில் ஒரு காட்சியில் சிகரெட் பிடிப்பதற்கு எதிராக ஒரு வசனம் பேசுவார்.

Rajinikanth
Rajinikanth

எனினும் அவரது பல ஸ்டைல்களில் மிகவும் ரசிக்கத்தக்க ஸ்டைலாக அவர் சிகரெட் பிடிப்பதும் அமைந்தது. குறிப்பாக சில திரைப்படங்களில் கையை தூரமாக வைத்து சிகரெட்டை சரியாக உதட்டில் அமரும்படி செய்துகாட்டுவார். இது ரசிகர்களிடையே கிளாப்ஸ்களை அள்ளியது.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் ஒரு ஹோட்டலில் இருந்தபோது, அவர் அருகே ஒரு சிறு வயது பெண் ஓடி வந்து, “சினிமாவில் எல்லாம் சிகரெட்டை தூக்கி போட்டு பிடிக்கிறீர்களே. அது போல் இப்போது செய்து காட்டுங்கள் பார்க்கலாம்” என கேட்டாராம். உடனே ரஜினிகாந்த்தும் அவ்வாறு செய்துகாட்டி அந்த பெண்ணை அசத்தினாராம். அதனை பார்த்து ரசித்த பெண் மிகவும் நன்றி என கூறிச் சென்றுவிட்டாராம்.

Raadhika
Raadhika

அந்த சிறு வயது பெண் வேறு யாரும் இல்லை. பின்னாளில் பல திரைப்படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகாதான் அந்த பெண்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.