மேட்சும் போச்சு சீரிஸும் போச்சு – மோசமான பேட்டிங்கால் இந்தியா தோல்வி !

Published on: February 8, 2020
---Advertisement---

1e37555103fcac6b490f7caeeaf1c7d4

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது..

நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த  நியுசிலாந்து குப்தில் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோரின் அரைசதத்தால் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை சேர்த்தது. இந்தியா சார்பில் சஹால் 3 விக்கெட்களும், தாகூர் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

அதையடுத்துக் களமிறங்கிய இந்திய அணியில் கோலி உள்ளிட்ட முன் வரிசை வீரர்கள் சொதப்ப இந்தியா 71 ரன்களுக்கே 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் வந்த வீரர்களில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா மற்றும் சைனி ஆகியவர்கள் மட்டுமே ஓரளவு நிலைத்து நின்று விளையாடினர். ஆனால் மற்ற வீரர்கள் அவர்களுக்கு துணை புரியாததால் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும், ஜடேஜா மற்றும் சைனி முறையே 55 மற்றும் 45 ரன்களும் சேர்த்தனர். இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

Leave a Comment