ஒரே நைட்டில் ஹீரோவை மாற்றிய ஷங்கர்… படம் தாறுமாறு ஹிட்!!

Published on: October 16, 2022
Shankar
---Advertisement---

இயக்குனர் ஷங்கர் தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 1990களிலேயே கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் பிச்சி உதறியவர் இயக்குனர் ஷங்கர். ஹாலிவுட் திரைப்படங்களில் பார்க்கும் பல பிரம்மாண்ட தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவில் முயன்று, அதன் பின் பிரம்மாண்டத்திற்கென்றே இந்திய சினிமாவில் தனி அடையாளமாகிப் போனவர்.

Shankar
Shankar

தனது முதல் திரைப்படமான “ஜென்டில் மேன்” திரைப்படத்திலேயே தாறுமாறு ஹிட் கொடுத்தவர். அதன் பின் அவர் கைவைத்த எல்லாமே வெற்றிதான். குறிப்பாக இந்திய சினிமாவையே புரட்டிப்போட்ட “எந்திரன்” திரைப்படத்தை நம்மால் மறந்திருக்க முடியாது. ஹாலிவுட் பாணியில் நவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரசிகர்களை மிரளவைத்தார் ஷங்கர்.

ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிவருகிறார். அதே போல் கமல்ஹாசனின் “இந்தியன் 2” திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

Gentleman
Gentleman

இந்த நிலையில் ஷங்கரின் முதல் திரைப்படமான “ஜென்டில் மேன்” திரைப்படத்தில் அர்ஜூனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தவர் சரத்குமார் என்ற தகவலை ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார் இயக்குனர் காந்தி கிருஷ்ணா.

Sarathkumar
Sarathkumar

மேலும் அப்பேட்டியில் அவர் “ஜென்டில் மேன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சரத்குமார்தான். சரத்குமார் இருப்பது போன்ற அழைப்பிதழ்கள் பலவும் அச்சடிக்கப்பட்டன.  ஆனால் எக்காரணத்தாலோ சரத்குமார் நடிக்க முடியவில்லை. ஒரு நாள் இரவு அர்ஜூன் நடித்து அப்போது வெளியாகியிருந்த ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு அன்றைக்கே ஹீரோ மாற்றப்பட்டது” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஷங்கரின் முதல் திரைப்படமான “ஜென்டில் மேன்” திரைப்படம் தாறுமாறான ஹிட் அடித்த படம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.