ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது கிடைக்க காரணம் யார் தெரியுமா? சுவாரஸ்ய தகவல்

Published on: October 16, 2022
ஏ.ஆர்.ரஹ்மான்
---Advertisement---

ஏ.ஆர்.ரஹ்மான் தனது முதல் படமான ரோஜா தேசிய விருது வாங்க முக்கியமாக இருந்த பிரபலம் யார் என்பது குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.

தமிழ் சினிமாவில் 80களில் தாண்டினால் இளையராஜாவின் இணைக்கு நின்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் தான். அவரினை பல இயக்குனர்களும் தங்கள் படங்களுக்கு புக் செய்தனர். ஆனால், பாலுமகேந்திரா மட்டும் தன்னுடைய படங்களுக்கு இளையராஜாவினை தான் ஒப்பந்தம் செய்வார். அதுகுறித்து ஒருமுறை அவரிடம் ஏன் உங்களுக்கு ரஹ்மானை பிடிக்கவில்லையா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

ரோஜா
ஏ.ஆர்.ரஹ்மான்

அதற்கு சிரித்துக்கொண்டே “எனக்கு இளையராஜாவை இப்போதும் பிடிக்கிறது. எம்.எஸ்.விஸ்வநாதனை இப்போதும் பிடிக்கிறது. அதேபோல்தான் சலீல் சௌத்ரி. எனக்கு இது போதும்…” என்று பதிலளித்திருந்தார். இப்படி இளையராஜாவிற்கு தனது பாசத்தினை காட்டியவர் தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசியவிருது கிடைக்க காரணம் என்றால் நம்ப முடிகிறதா?

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் இளையராஜா.. அட இது செமயா இருக்கே!…

தேசிய விருதுக்கான போட்டியில் ‘ரோஜா’ படம் இருந்த போது அக்குழுவின் தலைவராக இருந்தவர் இயக்குனர் பாலுமகேந்திரா. அவருக்கு தலைவர் என்ற முறையில் இரண்டு ஓட்டுக்கள் இருக்கும். அப்போது சிறந்த இசையமைப்பாளருக்கான பிரிவில் இரண்டு பேர் சமமாக ஓட்டு வாங்கினார்கள். ஒருவர் இளையராஜா, இன்னொருவர் ஏ.ஆர்.ரஹ்மான். தலைவர் என்ற முறையில் தற்போது அந்த இரண்டாவது ஓட்டினை பாலுமகேந்திரா யாருக்கு போடுகிறாரோ அவருக்கு தான் தேசிய விருது.

பாலு மகேந்திரா
பாலு மகேந்திரா

பாலுமகேந்திரா தனது நீண்டகால நண்பர் இளையராஜாவிற்கு தான் வாக்களிப்பார் என அனைவரும் நினைத்தனர். ஆனால் பாலுமகேந்திரா தனது வாக்கினை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அளித்தார். அதற்கு காரணமாக அவர் கூறியது “இரண்டுமே சிறந்த இசை. இளையராஜா ஏற்கனவே தனது இடத்தினை உருவாக்கி விட்டார். அவருக்கு சரிசமமாக வந்து நிற்கிறான் ஒரு 22 வயது பையன். அவன் இனி எவ்வளவோ விருது வாங்கலாம். ஆஸ்கர்கூட வாங்கலாம். ஆனால் முதல் படத்துக்கு கிடைக்கிற அங்கீகாரம் தனியானது அல்லவா…? ஆகவே, நான் ரஹ்மானுக்கு ஓட்டளித்தேன் எனக் குறிப்பிட்டார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.