Connect with us

Cinema News

லெஜென்ட்னா இவரு தான்…யா…! வாழ்க்கையின் யதார்த்த உண்மைகளை என்ன ஒரு தில்லா… புட்டு புட்டு வைக்கிறாரு பாருங்க…!!!

உலகநாயகன் கமல்ஹாசன் 5 வயது முதலே திரையுலகில் களம் பல கண்டவர். எத்தனை எதிர்ப்புகள், விமர்சனங்கள், தடைகள் வந்த போதும் அதைத் தகர்ந்தெறிந்து மீண்டு வந்தவர்.

திரையுலகில் அவர் கடந்து வந்த பாதைகளைத் தொகுத்து விட்டால் அது தான் அத்தனை நடிகர்களுக்கும் ஒரு அகராதியாக இருக்கும். திரையுலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் மய்யமாக நின்று மக்கள் மனதில் குடியேறியவர். இனி அவரது படத்தில் இடம்பெற்ற புரட்சிகரமான வசனங்களைப் பார்ப்போம்.

மகாநதி

kamal in Mahanathi

நான் இப்படி இருக்கேன். அவன் அப்படி இருக்கான். அதான் ஏன்…? நின்னு கொல்ற தெய்வமும் சும்மாருக்கு. அன்று கொல்ற சட்டமும் சும்மாருக்கு. ஆனா..எனக்கு மட்டும் தண்டனை…ஏன்? நான் நேர்மையா இருந்ததுக்காகவா?

சாந்தமா கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா? நல்லவங்களாம் கோபப்படாம இருக்கறதால தான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது…இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதால தான் அவன்அவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்ரும்…காரித் துப்பினா என்ன கெட்ரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்..! இனிமே நானும் அப்படி தான் செய்றதா இருக்கேன்..!

வசதி இல்லாத என்னால நெஜத்தை மட்டும் இல்லீங்க…என்னைக் கூட காப்பாத்திக்க முடியாதுங்க…!

குருதிப்புனல்

தீவிரவாதி பத்ரியாக நடித்த நாசரிடம் கமல் இன்டர்வியூ செய்யும் காட்சி.

வீரம்னா என்னன்னு தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது. உனக்கு அப்புறம் இருக்குற சந்ததியை உற்றுப்பார். சினிமா பார்த்து வளர்ந்த பலஹீனமான கூட்டம் தான் தெரியும். அவங்கள அரசாங்கம் விலைக்கு வாங்கிடும். இல்ல…மிதிச்சி நசுக்கிடும்.

விருமான்டி

Virumandi

சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிககேல மனுஷனுக்கு தெரியறதில்ல…எல்லாம் போகுது பாருங்க…அதான்…!

விருமான்டி படத்திற்காக கமல் சொல்லும் டயலாக் இது. படத்தில் ஒரு யதார்த்தமான உண்மை இது. தூக்குத் தண்டனைக் கைதியாக இருக்கும் கமலுடன் ஏஞ்சலா காத்தமுத்துவாக வரும் ரோகிணி இன்டர்வியூ செய்யும் காட்சியில் தான் இப்படி பேசுவார். ரொம்பவே சூப்பரான டயலாக் இது.

உன்னைப் போல் ஒருவன்

காமன் மேன் பற்றி கமல் வெகு அற்புதமாக சொல்லியிருக்கும் படம் இது. இந்தப் படத்தில் அந்த கதாபாத்திரமாகவே நடித்தும் இருக்கிறார். மோகன்லாலிடம் போனில் கமல் பேசும் காட்சி நச்சென்று இருக்கும். யார் நீ? என மோகன்லால் கேட்பார். பயோடேட்டா எதுக்கு கேட்கறீங்க மிஸ்டர் கமிஷனர். என்னை உங்களுக்குத் தெரியும்.

நிறையவாட்டி பார்த்துருப்பீங்க.. ரேஷன் கடையில புழுத்துப் போன அரிசியையும், கெரசினையும் வாங்குறதுக்கு நீளமான ஒரு கியூ நிக்குமே. அதுல கிட்டத்தட்ட கடைசில நிக்குறது நானா தான் இருக்கும். கடற்கரையிலயோ மசூதிலயோ கோவில்லையோ, நடுத்தெருவிலையோ உத்தேசமா ஒரு ஆள சுட்டிக்காட்டுங்க. அது நானா தான் இருக்கும்.

எங்காவது ரெயில் எரிஞ்சா, கட்டி வச்சதை இடிச்சா, அரசியல்வாதியோட உயிர் போனா முதல்ல போறது என் உயிரா தான் இருக்கும். நடுத்தெருவுல பெட்ரோல் ஊற்றிக் கொளுத்துவாங்க.

என் உயிரையும் உடைமையும் காப்பாத்துங்கன்னு ஒங்க போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்க ஒருத்தன் வருவான். அவனையே கிரிமினல் மாதிரி நீங்க நடத்துவீங்க. ஞாபகம் இருக்கா…அது நான்..தான்..! நீங்கள்லாம் வெத்து வேட்டுன்னு நினைக்கி றீங்களே…அந்த காமன் மேன்…!

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top