தனுஷின் உயிருக்கே பங்கம் விளைவித்த ரசிகர்கள்… பாசமே வினையாய் முடிந்த துயர கதை…

Published on: October 22, 2022
Dhanush
---Advertisement---

தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தனுஷ், “துள்ளுவதோ இளமை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தனுஷ் நடிக்க வந்த புதிதில் அவரது உருவத்தை குறித்து பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால் அந்த தடைகளை எல்லாம் தாண்டி தற்போது தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் டாப் ஹீரோவாக திகழ்கிறார். சமீபத்தில் கூட தனுஷ் நடித்த “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளிவந்தது.

Dhanush
Dhanush

தனுஷ் “துள்ளுவதோ இளமை” திரைப்படத்தை தொடர்ந்து “காதல் கொண்டேன்” திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படம் தனுஷிற்கு ஒரு முக்கிய திருப்புமுனையான திரைப்படமாக அமைந்தது. அவரின் நடிப்பை பெரிதும் வியந்து பாராட்டினர்.

“காதல் கொண்டேன்” திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்த “திருடா திருடி” திரைப்படம் அவரை ஜனரஞ்சக கதாநாயகனாக ஆக்கியது. இத்திரைப்படத்தை தொடர்ந்து பலரின் உள்ளத்தை கவர்ந்தார் தனுஷ். குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மன்மத ராசா” பாடல் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

Thiruda Thirudi
Thiruda Thirudi

இத்திரைப்படத்தை தொடர்ந்து தனுஷிற்கு ரசிகர்கள் அதிகமாகத் தொடங்கினார்கள். தனுஷ் மக்கள் ரசிக்கும் திரைக்கலைஞனாக உருவானார். இந்த நிலையில் 2003 ஆம் ஆண்டு,  ஒரு நாள் தனுஷ், விமான நிலையத்தில் இருந்து வெளிவந்தபோது அங்கே இருந்த ரசிகர்கள் இவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க சுற்றி வளைத்துவிட்டார்களாம். இந்த நெரிசலில் தள்ளாடிய தனுஷ், அங்கே தோண்டப்பட்டிருந்த ஒரு குழிக்குள் விழுந்துவிட்டார். இதனால் அவரது இடது கைக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. உடனே தனுஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம்.

Dhanush
Dhanush

எனினும் தனுஷ் இதனை தவறான ஒன்றாக நினைக்கவில்லையாம். ரசிகர்கள் தன் மேல் வைத்திருக்கும் அன்புதான் அந்த நேரத்தில் அவருக்கு முக்கியமானதாக இருந்ததாம்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.