Connect with us
Ajith and Rajini

Cinema News

ரஜினி நடிக்க ஆசைப்பட்ட படம்… பிளானை மாற்றிய இயக்குனர்… அஜித்துக்கு அடித்த லக்…

கமர்சியல் சினிமாவுக்கென்றே தனி முத்திரை பதித்த இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார், 2000 ஆம் ஆண்டு கமல்ஹாசனை வைத்து “தெனாலி” என்ற திரைப்படத்தை இயக்கினார்.

KS Ravikumar

KS Ravikumar

இத்திரைப்படத்தின் உருவாக்கத்திற்கு முன்பே கமல்ஹாசன் கே.எஸ்.ரவிக்குமாரிடம் “அன்பே சிவம்” திரைப்படத்தின் கதையை கூறியிருந்தாராம். இந்த காலக்கட்டத்தில் ஒரு நாள் ரஜினியை சந்தித்த கே.எஸ்.ரவிக்குமார், கமல்ஹாசன் கூறிய “அன்பே சிவம்” கதையை ரஜினியிடம் கூறினார்.

மேலும் “தெனாலி” திரைப்படத்தின் கதையையும் கூறிய கே.எஸ்.ரவிக்குமார், ஒரு தந்தை இரண்டு மகன்களுக்குள் நடக்கும் புதிய கதை ஒன்றையும் கூறியுள்ளார். இதனை கேட்ட ரஜினிகாந்த் தந்தை மகன் கதை குறித்து விளக்கமாக கூறுமாறு கேட்டிருக்கிறார்.

Rajinikanth

Rajinikanth

“ஒரு தந்தை, இரண்டு மகன்கள். அதில் தந்தை பெண்கள் போன்ற நளினம் உடையவராக இருப்பார்” என அந்த கதையை கூறினாராம் ரவிக்குமார். இதனை கேட்ட ரஜினிகாந்த் “இந்த கதைக்கு மதனா என டைட்டில் வையுங்கள். இந்த கதையை நிச்சயமாக கமல்ஹாசன் ஒப்புக்கொள்ள மாட்டார் என நினைக்கிறேன். ஒரு வேளை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நான் இந்த படத்தில் நடிக்கிறேன்” என கூறினாராம்.

இதனை தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் “தெனாலி” திரைப்படத்தை இயக்கினார். அத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து “ஜக்குபாய்” திரைப்படத்தை இயக்கினார் ரவிக்குமார். ஆனால் சில காரணங்களால் அத்திரைப்படம் நின்றுபோனது. இதை நாம் அனைவரும் அறிவோம்.

KS Ravikumar

KS Ravikumar

இதனை தொடர்ந்துதான் கே.எஸ்.ரவிக்குமார் “தந்தை-மகன்” கதையை அஜித்திடம் கூறினாராம். அஜித்திற்கும் இந்த கதை பிடித்துப்போக இத்திரைப்படத்திற்கு “காட் ஃபாதர்” என்று டைட்டில் வைக்கப்பட்டது.

உடனே அஜித் மூன்று வேடங்களில் “காட் ஃபாதர்” என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பத்திரிக்கைகளில் பரவியது. அப்போது ரஜினிகாந்த் “சந்திரமுகி” திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தாராம். ஒரு நாள் கே.எஸ்.ரவிக்குமாரை சந்தித்தபோது “நீங்கள் ஏதோ காட் ஃபாதர் என்று ஒரு படத்தை இயக்குவதாக கேள்விப்பட்டேனே. அது என்ன படம்?” என கேட்டாராம்.

Rajinikanth

Rajinikanth

உடனே ரவிக்குமார் “அத்திரைப்படத்தின் கதையை ஏற்கனவே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன். அந்த கதைக்கு கூட நீங்கள் மதனா என்ற டைட்டிலை வைக்குமாறு கூறீனீர்களே” என ரஜினிகாந்த்திற்கு ஞாபகப்படுத்தினாராம்.

அதன் பின்தான் ரஜினிகாந்த்திற்கு அந்த “தந்தை-மகன்” கதை ஞாபகம் வந்திருக்கிறது. உடனே “ஜக்குபாய் படம் நின்றபோது நீங்கள் ஏன் இந்த கதையை என்னிடம் கூறி ஞாபகப்படுத்தவில்லை” என கேட்டாராம்.

அதற்கு ரவிக்குமார் “எனக்கு அப்போது இது தோன்றவில்லை. ஆதலால்தான் உங்களிடம் நான் சொல்லவில்லை” என கூறினாராம். எனினும் இதற்கு ரஜினிகாந்த் எந்த பதிலும் கூறவில்லையாம்.

Varalaru

Varalaru

இவ்வாறுதான் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்ட திரைப்படமான “காட் ஃபாதர்” திரைப்படத்தில் அஜித்குமார் நடித்தார். அத்திரைப்படத்தின் டைட்டில் பின்னாளில் “வரலாறு” என மாற்றப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top