மாஸ்டர் படப்பிடிப்பில் மாஸ் காட்டிய விஜய்… ரசிகர்களுடன் செல்பி… வைரலாகும் வீடியோ

Published on: February 10, 2020
---Advertisement---

நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படப்பிடிப்பிற்காக நெய்வேலியில் இருக்கிறார். நிலக்கரி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து அவரைக் கான அவரின் ரசிகர்கள் தினமும் அங்கு குவிந்து வருகின்றனர்.

படப்பிடிப்பு முடிந்து அவர் வெளியே வரும் போதும், உள்ளே செல்லும் போது அவரைக்கண்டு கையைசத்து கத்தி கதறி தங்களின்  மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர். எனவே அங்கு வந்த விஜய் ஒரு வேனின் மீது ஏறினார். அதன் பின் செல்போனில் ரசிகர்களுடன் செல்பியும் எடுத்தார். இதைக்கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து அவர்களும் தங்களின் செல்போன்களில் செல்பி எடுத்தனர். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment