மலையாளத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் “தி கிரேட் இந்திய கிட்சன்”. இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உருவாகி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் ராகுல் ரவீந்திரன் இணைந்து நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஆர். கண்ணன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் “கண்டேன் காதலை”, “வந்தான் வென்றான்”, “சேட்டை”, “இவன் தந்திரன்”, “காசேதான் கடவுளடா” போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தின் டிரைலர் இதோ…