ரஜினியும், கமலும் ஒன்னா நடிக்கணும்… ஆசைப்பட்ட ஏவிஎம்.. தடா போட்ட உலகநாயகன்.. என்ன நடந்தது?

Published on: October 27, 2022
ரஜினி கமல்
---Advertisement---

ரஜினி மற்றும் கமலை இணைத்து ஒரு படத்தில் தயாரிக்க ஏவிஎம் நிறுவனம் விரும்பியபோது கமல் அதை நிராகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய அங்கமாக இருப்பது ஏவிஎம் நிறுவனம். 60களில் துவங்கிய பயணம் இன்று வரை சென்று கொண்டு தான் இருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் மெய்யப்ப செட்டியார் மீது அனைத்து சினிமா பிரபலங்களுக்கும் மிகப்பெரிய மரியாதை இருந்தது.

ஏவிஎம்
ஏவிஎம்

ஒரு முறை எஸ்.பி.முத்துராமன் உடன் ரஜினிகாந்த் ஏவிஎம் ஸ்டூடியோவிற்குச் சென்றார். அங்கு மெய்யப்பச் செட்டியாரை சந்தித்து ஆசி வாங்கியிருக்கிறார். அந்த சமயத்தில் ரஜினி மற்றும் கமல் நடிப்பில் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்த காலம். “ஏவிஎம் நிறுவனத்திற்கு ஏன் அப்படியொரு படத்தை இயக்கித் தரக்கூடாது?” என்று மெய்யப்பச் செட்டியார், இயக்குநர் முத்துராமனை கேட்டிருக்கிறார்.

இதற்கு முத்துராமனும் சம்மதம் தெரிவித்தார். ரஜினிக்கும் ஏவிஎம் நிறுவனத்தில் நடிக்க விருப்பமாக இருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த சந்திப்பு நடந்த சில நாட்களில் மெய்யப்ப செட்டியார் இறந்து விட்டார். இது முத்துராமன் மற்றும் ரஜினிக்கு ஏமாற்றமாக இருந்தது.

சில நாட்கள் கழித்து ஏவிஎம் சரவணன் முத்துராமனைச் சந்தித்து, “அப்பச்சியின் வாக்கு நிறைவேறாமல் போகக்கூடாது. படத்தை ஆரம்பியுங்கள்” என்றாராம். ஆனால் மீண்டும் அந்த பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டவர் கமல்ஹாசன்.

முரட்டுக்காளை
முரட்டுக்காளை

ரஜினியும் நானும் இணைந்து நடிப்பதைத் தவிர்க்க நினைக்கிறோம் என தடாலடியாக கூறினார். இது அவர்களின் மார்க்கெட் உயர உதவியாக இருக்கும் எனக் கூறப்பட்டது. அதனால் இருவரும் ஒரே நேரத்தில் உயரத்தினை அடையலாம் என்பது கமலின் எண்ணமாம். இதை மதித்த ஏவிஎம் சரவணன் சரி இருவரும் தனி தனி படம் செய்து கொடுங்கள் என்றாராம்.

அந்த நேரத்தில் ரஜினி கால்ஷூட் தயாராக இருந்த நிலையில், ஏவிஎம்மின் வழக்கப்படி எளிமையான பூஜையுடன் ‘முரட்டுக்காளை’யின் படப்பிடிப்பு உடனே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.