பாலசந்தரை பார்த்து வாயடைத்த தாமு… அதுக்கு முன்ன என்ன செஞ்சாருன்னு கேளுங்க… சுவாரஸ்ய பின்னணி

Published on: October 28, 2022
தாமு
---Advertisement---

இயக்குனர் பாலசந்தரை அடையாளம் தெரியாமல் திகைத்து நின்ற தாமு குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வானமே எல்லை என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை ஏறத்தாழ நூறு படங்கள் வரை நடித்துள்ளார். மிமிக்ரி செய்வதில் மிகத்திறமையானவர் தாமு. இவர் ஏழு ஆண்டுகளாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமு
தாமு

இந்நிலையில் தாமு, கே.பாலசந்தரை அடையாளம் தெரியாமல் முழித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. கேளடி கண்மணி’ படத்தோட நூறாவது நாள் விழா நடந்தப்போ மேடையில் மிமிக்ரி செய்திருக்கிறார் தாமு. அதை கே.பாலசந்தர் பார்த்து ரசித்து இருக்கிறார். இதை தாமுவிடம் அவரின் ஆசிரியர் மு.மேத்தா கூற தாமுவிற்கு பாலசந்தரை பார்க்க ஆசையாக இருந்திருக்கிறது. இதை இயக்குனர் வசந்திடம் கேட்டுவிட்டார்.

ஒருநாள் வசந்த் அவரை பாலசந்தரை பார்க்க கூட்டிசென்று இருக்கிறார். தாமுவிடம் இங்கேயே வெயிட் பண்ணு. சார் வருவார் எனக் கூறி சென்றாராம். ஒரு பத்து நிமிடம் வரைக்கும் பார்த்த தாமு வீட்டி யாருமே இல்லை. ஒரு வயசான ஆள் பாலசந்தர் சாரோட வீட்டுல இருந்த விருதுகளை எல்லாம் துடைச்சுக்கிட்டு அங்கிட்டும், இங்கிட்டுமா நடந்துக்கிட்டு இருந்திருக்கிறார். அவர்கிட்ட, ‘டைரக்டர் எப்போ வருவார்’னு கேட்க ‘என்ன அவசரம். உட்காரு தம்பி’னு சொல்லிட்டு, அவர் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டார்.

பாலசந்தர்
பாலசந்தர்

தாமுவிற்கோ என்னடா இது என யோசிக்கையில், மேசையில் பாலசந்தரின் கண்ணாடி இருக்க சரி இதை போட வந்து தானே ஆகவேண்டும் என காத்திருந்தார். அந்த வயசான ஆள் கண்ணாடியை எடுத்து மாட்டி இருக்கிறார். அப்போதான் தெரிஞ்சதாம் இவ்வளவு நேரம் தன்னை சுற்றி வந்த இவர் தான் பாலசந்தர் என்பதே. இது உனக்குத் தேவையா ரேஞ்சில் வாயடைத்து நின்றதாக தாமு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.