
Cinema News
கல்யாணத்தினை ஏழு வருடம் மறைத்த முன்னணி நடிகை… நீங்க நினைக்கிற ஆளு இல்லங்கோ…
Published on
By
நடிகைகள் திருமணத்தினை ஈசியாக இப்போதே கண்டுபிடிக்க முடியாத நிலையில் 30 வருடத்திற்கு முன்னர் இதே போன்று ஒரு முன்னணி நடிகை தனது திருமணத்தினை 7 வருடமாக மறைத்து வைத்திருந்தாராம்.
தமிழ் சினிமாவின் கவர்ச்சி நாயகி எனக் கூறியவுடன் சில்க்கிற்கு பின்னர் நினைவுக்கு வருபவர் டிஸ்கோ சாந்தி தான். குடும்ப சூழ்நிலை காரணமாக சினிமாவிற்குள் வந்தவர். மலையாளத்துல நடிச்ச முதல் படத்திலேயே மோகன்லாலுக்கு ஜோடியானார். அமெரிக்காவுல 40 நாள் ஷூட்டிங் நடந்தது. ஆனா, இந்தப் படம் பாதியிலேயே டிராப் ஆயிடுச்சு.
நடிகை
இந்த நேரத்தில் தமிழ் சினிமாவுல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட டிஸ்கோ சாந்திக்கு வாய்ப்பு கிடைத்தது. ‘ஊமை விழிகள்’ படத்துல வர்ற ‘ராத்திரி நேரத்துப் பூஜையில்…’ பாட்டின் மூலம் ஹிட் ஆனார். தொடர்ச்சியாக இதே போன்ற வாய்ப்புகள் குவிந்ததாம். தெலுங்கில் நடித்துக்கொண்டிருந்த போது அங்கு இவருக்கு அறிமுகமானவர் வில்லன் நடிகர் ஸ்ரீ ஹரி. தொடர்ச்சியாக இருவருக்கும் காதல் ஏற்பட்டதால் திருமணம் செய்ய குடும்பத்தினர் சம்மதித்தாலும் அதை செய்ய பொருளாதார பிரச்னை இருந்ததால் சில நாட்கள் செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறார்கள்.
ஆனால் ஒரு எதிர்பாராத சூழலில் கோயிலில் இருக்கும் போது இவரின் கழுத்தில் தாலி கட்டிவிட்டாராம் ஸ்ரீஹரி. இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் அதற்கு சாந்தி சந்தோஷமே பட்டு இருக்கிறார். உடனே தனக்கு நல்ல கணவன் அமைந்தால் தாலியை உண்டியலில் போட்டு விட்டாராம். கருகமணி ஒன்றினை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு இருக்கிறார்.
டிஸ்கோ சாந்தி
இந்த தகவலை ஏழு வருடமாக மறைத்து வைத்தாராம். நல்ல செட்டில் ஆன பிறகே அனைவரையும் அழைத்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
Manikandan: எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்து போராடி பல வேலைகளை செய்து...
Ajith: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. மனைவி ஷாலினி கேட்டுக்...
Idli kadai: பாக்கியராஜின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே...
Idli kadai Review: தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இதற்கு முன்...
Vijay: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து அந்த...