தன்னுடைய மறைவிற்கு பின் ரிலீஸான 30 படங்கள்!..அந்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர் தான்!..

Published on: October 29, 2022
suruli_main_cine
---Advertisement---

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையான அந்தஸ்தை பெற்று விளங்குபவர்கள் படத்தில் நடிக்க கூடிய நகைச்சுவை நடிகர்கள் தான். அந்த காலங்களில் இருந்து நாகேஷ், தங்கவேல், ராமசாமி, தேங்காய் சீனிவாசன் போன்ற நடிகர்கள் இல்லாத படங்களை பார்ப்பது என்பது அரிது.

suruli1_cine

அவர்களை அடுத்து கவுண்டமணி-செந்தில் போன்ற நகைச்சுவை ஜாம்பவான்கள் தங்கள் ராஜ்ஜியங்களை நடத்திக் கொண்டிருந்தனர். பெரும்பாலான 80’s படங்கள் எல்லாம் கவுண்டமணி- செந்தில் ஃபிரீயாக இருக்கிறார்களா? என்று கேட்ட பிறகு தான் படத்தின் ஹீரோக்களை கமிட் செய்வார்கள். அந்த அளவுக்கு நகைச்சுவை நடிகர்களுக்கு என்று ஒரு மதிப்பு இருந்தது.

இதையும் படிங்க : படப்பிடிப்பில் அவமானப்படுத்திய இயக்குனர்… “இனிமேலும் நடிக்கனுமா”? அதிரடி முடிவெடுத்த சிவக்குமார்…

suruli2_cine

அந்த வகையில் இடைப்பட்ட காலத்தில் 1965ஆம் ஆண்டில் இருந்து தன்னுடைய ராஜ்ஜியத்தை நடத்தத் தொடங்கியவர் நடிகர் சுருளிராஜன். கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மிகப்பெரும் உச்சத்தில் இருக்கும் போதே அவரை மரணம் தேடி வந்தது.

suruli3_cine

1980 ஆம் ஆண்டு சுருளிராஜன் இறந்தார். ஆனாலும் அவர் மறைவிற்கு பின் ஏற்னெகவே நடித்த படங்கள் வரிசையாக 81, 82, 83 ஆகிய ஆண்டுகளில் வெளியானது. கிட்டத்தட்ட 30 படங்கள் அவர் இறந்த பின் ரிலீஸ் செய்யப்பட்டன. ஒரு வேளை அவர் இருந்திருந்தால் அந்த ஆண்டுகளில் 300 படங்களில் நடித்திருந்து சாதனை படைத்திருப்பார் என்று சித்ரா லட்சுமணன் தெரிவித்தார். மேலும் 1980 ஆம் ஆண்டு அந்த ஒரே ஆண்டில் 50 படங்களுக்கும் குறையாமல் நடித்து ரிக்கார்ட் வைத்திருந்தார் சுருளிராஜன்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.