அன்புச்செழியனால் சிக்கிய விஜய்… சம்மன் அனுப்பிய பின்னணி இதுதான்!

Published on: February 10, 2020
---Advertisement---

9637a9cf318786d60106823a458e0b77

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய், பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், பிகில் படத்தை தயாரித்த கல்பாத்தி அகோரம் ஆகியோவின் வீடு மற்றும் அலுவலகம் என மொத்தம் 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.77 கோடி பணம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், நகைகள் கைப்பற்றப்பட்டன. அதேபோல், அன்புச்செழியன் ரூ.165 அளவில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் கூறப்பட்டது. அதேநேரம் விஜய் தரப்பில் ரொக்கமான பணம் எதுவும் சிக்கவில்லை.

எனவே, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடிகர் விஜய், அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவன கல்பாத்தி ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காகத்தான் விஜய்க்கு சம்மனும் அனுப்பப்பட்டது. எனவே, ஓரிரு நாளில் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment