
latest news
வீட்டுல இருக்க பிடிக்காம ஜெமினி கணேசன் பண்ண காரியம்…அதற்கு உடந்தையாக இருந்த நடிகை!..
Published on
By
அந்தக் காலத்தில் காதல் மன்னன் யார் என்றால் டக்கென்று ஜெமினிகணேசன் என்று தான் சொல்வோம். மூவேந்தர்களாக திகழ்ந்த சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் ஆகிய மூவரும் ஒரே புகழை அடைந்தனர் மக்கள் மனதில்.
இருந்தாலும் இவர்களில் முதல் வெள்ளிவிழா படத்தை கொடுத்தது ஜெமினி கணேசன் தான். அதுவும் கல்யாண பரிசு என்ற படத்தின் மூலம் வெள்ளி விழாவை எட்டினார். இவரின் ஹேண்ட்ஸமான லுக்கும் அழகும் பெண் நடிகைகளை இவர் பக்கம் இழுத்தது.
இதையும் படிங்க : தான் நடித்த படத்தைப் பார்க்க டிக்கெட் கேட்ட ரஜினி…எரிந்து விழுந்த மேனேஜர்..!
ஏராளமான நடிகைகள் இவரை காதலிக்க தொடங்கினர். இது ஒரு பக்கம் இருந்தாலும் இவரின் படங்கள் நல்ல வரவேற்பை பெற தொடங்கியது. இப்படியே போய்க் கொண்டிருக்க ஒரு காலகட்டத்தில் வயசாக அப்படியே வீட்டில் உட்கார்ந்து விட்டார். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்ற பழமொழிக்கேற்ப இவரும் திகழ்ந்தார்.
வயதானாலும் இவரால் வீட்டில் இருக்க முடியவில்லை. ஆகவே இவருக்கு உறவினராகவும் பிரபல சின்னத்திரை தயாரிப்பாளாராகவும் நடிகையாகவும் இருக்கும் குட்டி பத்மினியிடம் ‘ஏதாவது நாடகம் இருந்தால் போடு , எனக்கு இதிலிருந்து விடுதலை கொடு’ என கேட்டாராம். ஜெமினியின் ஆசையை அறிந்த குட்டி பத்மினி அவரது மனைவியிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவரின் மனைவி ‘அவரை பூவாக பார்த்துக் கொண்டிருக்கிறோம், வெளியில் சாப்பிட்டால் ஒத்துக்காது’ என கூறியிருக்கிறார். ஆனால் குட்டி பத்மினியோ அவரை நான் பார்த்துக் கொள்கிறேன், நான் பொறுப்பு என கூறி குட்டி பத்மினி தயாரித்த பிரபல சீரியலான கிருஷ்ணதாசியில் நடிக்க வைத்திருக்கிறார். அந்த சீரியல் பெரும் வரவேற்பை பெற்றது.
கோலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் தனுஷ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பேன் இண்டியா நடிகராக வலம் வருவதோடு மட்டுமில்லாமல்...
Idli kadai: ராயன் திரைப்படத்திற்கு பின் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படம் நேற்று வெளியானது.. இந்த படத்தை ரெட்ஜெயண்ட்...
தனுஷ் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் இட்லி கடை. படத்தைப் பற்றி பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க…...
Nayanthara: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள்...
TVK Vijay: கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய...