
நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தின் இயக்குனர் மற்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஆகிய விவரங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் முடிந்து படம் ஏப்ரலில் ரிலிஸாக உள்ளது. இந்நிலையில் விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி விஜய் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இதில் இயக்குனர் பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், பேரரசு ஆகிய இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வந்தன. ஆனால் இப்போது அருண்ராஜா காமராஜ்தான் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் முதல் படத்தில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.