உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரம்மாண்ட படைப்பு… வெளியானது அவதார் 2 டிரைலர்…

Published on: November 2, 2022
Avatar2
---Advertisement---

கடந்த 2009 ஆம் ஆண்டு “அவதார்” திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து பாக்ஸ் ஆஃபிஸை திணறவைத்தது. உலகின் பல்வேறு மூலைகளிலும் “அவதார்” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

“அவதார்” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு “அவதார்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என உலகமே காத்துக்கொண்டிருந்தது. இதனிடையே “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் வெளிவந்துள்ளது. திரைப்படத்தை பார்ப்பதற்கு ஆவலை தூண்டும் வகையில் இந்த டிரைலரை பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார்கள். ரசிகர்கள் பலரும் மிகுந்த உற்சாகத்தோடு இந்த டிரைலரை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். “அவதார் 2” திரைப்படத்தின் டிரைலர் இதோ….

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.