ஒரே ரூமிற்குள் 500 ரஜினி!!… அரண்டுபோன பிரபல இயக்குனர்… சூப்பர் ஸ்டார் வீட்டிற்குள் இருக்கும் கண்ணாடி அறையின் ரகசியம் என்ன??

Published on: November 8, 2022
Rajinikanth
---Advertisement---

இயக்குனர் பி.வாசு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக அவர் ரஜினியை வைத்து இயக்கிய “மன்னன்”, “சந்திரமுகி” ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றிப்பெற்றது. அதிலும் “சந்திரமுகி” திரைப்படம் 1000 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

P.Vasu
P.Vasu

பி.வாசு  ரஜினியை வைத்து முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “பணக்காரன்”. இத்திரைப்படம் 1990 ஆம் ஆண்டு வெளியானது. ரஜினிகாந்திற்கு மிக முக்கிய வெற்றித்திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது.

இந்த நிலையில் “பணக்காரன்” திரைப்படம் உருவாவதற்கு முன்பு, ரஜினி வீட்டில் நடந்த ஆச்சரிய சம்பவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பி.வாசு பகிர்ந்துகொண்டார்.

அதாவது ரஜினிகாந்த்திற்கு “பணக்காரன்” திரைப்படத்தின் கதையை கூற அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார் பி.வாசு. அப்போது ரஜினி இருந்த அறைக்குள் சென்ற பி.வாசுவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டதாம். அந்த அறையில் 4 பக்கங்களும் ஆள் உயர முகம் பார்க்கும் கண்ணாடி இருந்திருக்கிறது. அதன் உள்ளே ரஜினியின் 500க்கும் மேற்பட்ட பிம்பங்கள் தெரிந்ததாம்.

இதையும் படிங்க: 100 நாட்களுக்கும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளா?? வெறித்தனமாக ஓடிய மணி ரத்னம் படம்… அடேங்கப்பா!!

Rajinikanth
Rajinikanth

இதை பார்த்து பயந்துபோன பி.வாசு, ரஜினியிடம் “எதற்காக இந்த கண்ணாடியை வைத்திருக்கிறீர்கள்?” என கேட்டாராம். அதற்கு ரஜினிகாந்த்” அது ஒன்றுமில்லை. நான் இப்போது ஒரு பெரிய நடிகன். இந்த கண்ணாடியில் என் முகத்தை பார்த்துக்கொண்டிருப்பேன். ‘உன்னை எல்லாம் பெரிய ஸ்டார் ஆக்கியிருக்கிறார்கள். எல்லாம் தலை எழுத்து’ என எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். இப்படி நானே என் முகத்தை பார்த்து விமர்சனம் செய்தால்தான் புகழ் என்றுமே என் தலைக்கு ஏறாது” என கூறினாராம். எப்படிப்பட்ட உளவியல் காரணம் பாருங்கள்!!

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.