Connect with us

Cinema News

விஜயகாந்த் மட்டும் தான் இதை செய்யாத ஒரே நடிகர்… படக்குழுக்கே அதிர்ச்சி கொடுப்பார்.. வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

தமிழ் சினிமாவில் உள்ள மிகப்பெரிய பிரபலங்களை விட ரொம்பவே வித்தியாசமானவர் தான் நடிகர் விஜயகாந்த். அவர் மற்ற நடிகர்கள் செய்ய தயங்குவதை அசால்ட்டாக செய்வதில் கில்லாடி என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கபடுகிறது.

விஜயகாந்த்

vijayakanth

பல போராட்டத்திற்கு பிறகு சினிமாவிற்கு வந்த விஜயகாந்த், சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் வெற்றி நாயகனாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். இப்படத்தினை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இதைத்தொடர்ந்து, விஜயகாந்தால் சினிமாவில் கோல் உயர்த்த முடியவில்லை. சாதிக்கொரு நீதி, நீதி பிழைத்தது, பார்வையின் மறுபக்கம், சட்டம் சிரிக்கிறது, பட்டணத்து ராஜாக்கள் எனப் பல படங்கள் தோல்வியை தழுவியது. இது அவரின் மார்க்கெட்டையும் அசைத்தது. அவரின் மற்ற படங்களின் படப்பிடிப்புகள் கூட மந்தமாக சென்றது.

மீண்டும் எஸ்.ஏ.சி இயக்கத்தில் சாட்சி படத்தில் நடித்த தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகச் சிறப்பாக கொண்டு சென்றார். அதற்கு ஒரு உதாரணமும் கூறப்படுகிறது. பெரிய நடிகர்களுக்கெல்லாம் தனியாக கேரவன் சினிமா படப்பிடிப்பு தளத்தில் கொடுக்கப்பட்டு விடும். ஆனால் அதை விஜயகாந்த் சாப்பிட மட்டுமே பயன்படுத்துவாராம்.

விஜயகாந்த்

vijayakanth

தனது காட்சி இல்லாத நேரத்தில் வெளியில் அமர்ந்து தனது படக்குழுவினருடன் பேசிக்கொண்டு இருப்பாராம். மதிய இடைவேளைக்கு மட்டுமே கேரவனில் சாப்பிட்டு விட்டு வருவாராம். மீண்டும் வெளியில் உட்கார்ந்து விட்டு ஷூட்டிங் முடிந்ததும் கிளம்பிவிடுவாராம். முன்னணி நடிகர்களில் கேரவனே பயன்படுத்தாத ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டும் தான் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Continue Reading

More in Cinema News

To Top