தமிழ் சினிமாவில் கமல் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில் வெள்ளைக்காரராக கமல் நடிக்கவில்லை. அது நான் தான் என ஒரு முன்னணி இயக்குனர் கொடுத்த ஸ்டேட்மெண்ட்டால் கமலே ஷாக்காகி விட்டாராம்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக கமல் தான் பத்து கதாபாத்திரங்களில் நடித்தார். தசாவதாரம் எனப் பெயரிடப்பட்ட இப்படத்திற்கு முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பு இருந்தது. இப்படத்தில் நிறைய பிரபலங்கள் கமலுக்காகவே நடித்தனர்.

அதில் நெட்டை கமலுக்கு அப்பாவாக ஷேக் முக்தார் என்ற முஸ்லீம் வேடத்தில் நாகேஷ் நடித்தார். அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்து இருக்கிறது. கிறிஸ்டியன் பிளெட்சர் வேடத்தில் கமல் மேக்கப்பெல்லாம் போட்டு விட்டு படப்பிடிப்பு தளத்தில் நாகேஷ் அருகில் சென்று நின்றாராம். அவரை பார்த்த நாகேஷ் யாரோ வெள்ளைக்காரர் போல என நினைத்துவிட்டாராம். பிறகு கமலின் கண்ணை வைத்தே இது அவர் தான் என்பதை உறுதிப்படுத்தினாராம்.

தொடர்ந்து, இந்த தகவலை ரமேஷ் கண்ணாவிடம் பகிர்ந்து கொண்டாராம் நாகேஷ். அப்போது கமலிடம் ரமேஷ் கண்ணா அடையாளமே தெரியலனு சொல்றாரு. அப்போ நானே நடிச்சேனு சொல்லிக்கிறேன் என குண்டை தூக்கி போட்டாராம். ஏ இவன் செஞ்சாலும் செய்வான். இவனுக்கு ஒரு வேடத்தினை கொடுத்து அமுக்குங்கள் என அவருக்காக உருவாக்கப்பட்டது தான் அந்த டாக்டர் வேடமாம். எப்படிலாம் சான்ஸ் வாங்குறாருப்பா!
