உதவி கேட்டு வந்த நடிகரை வெகு நேரம் காக்க வைத்த அஜித்… ஆனால் அங்கதான் ஒரு டிவிஸ்ட்…

Published on: November 12, 2022
Ajith Kumar
---Advertisement---

“இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது” என ஒரு பழமொழியே உண்டு. அதாவது ஊருக்கே தம்பட்டம் அடிப்பது போல் உதவி செய்யக்கூடாது என பொருள். இந்த பழமொழிக்கு எடுத்துக்காட்டாக வாழக்கூடியவர்தான் அஜித்குமார்.

தன்னிடம் உதவி என்று நாடி வருவோர்க்கு தேவையான உதவியை செய்யும் அஜித், என்றுமே அந்த உதவியை விளம்பரப்படுத்தியது கிடையாது. ஆனால்  ஏதோ ஒரு வழியில் அவர் செய்த உதவிகள் சில வெளியே தெரிய வந்துவிடும். ஆனால் தன்னுடைய உதவியை நாடி வந்த சக நடிகரை அஜித் வெகு நேரம் காக்கவைத்த சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது. ஆனால் அதிலும் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார் அஜித்குமார். அப்படிப்பட்ட ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.

Ajith Kumar
Ajith Kumar

1999 ஆம் ஆண்டு அஜித்குமார், ஷாலினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அமர்க்களம்”. இதில் இவர்களுடன் ரகுவரன், ராதிகா, நாசர், தாமு, வையாபுரி,  சார்லி, பொன்னம்பலம் என பலரும் நடித்திருந்தனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள், பொன்னம்பலம் அவரது நண்பர் ஒருவரை படப்பிடிப்பிற்கு அழைத்து வந்திருந்தார்.

அந்த நண்பரை அஜித்திடம் அறிமுகப்படுத்திய பொன்னம்பலம் “இவனது குழந்தைக்கு இருதயத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது. ஆதலால் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறான். மருத்துவமனைக்கு பில் கட்ட பண உதவி தேவைப்படுகிறது. கொஞ்சம் உதவ முடியுமா?” என கேட்டிருக்கிறார்.

Ponnambalam
Ponnambalam

அதனை கேட்டுக்கொண்ட அஜித், அந்த நண்பரிடம் மருத்துவமனை குறித்த தகவல்களை கேட்டிருக்கிறார். மொத்தத்தையும் விசாரித்த அஜித், எதுவுமே சொல்லாமல் படப்பிடிப்புத் தளத்திற்குள் சென்றுவிட்டாராம். “இவர் என்ன எதுவுமே கூறாமல் படப்பிடிப்பில் நடிக்க சென்றுவிட்டார்” என்று வெகு நேரம் காத்திருந்தார்களாம்.

இதையும் படிங்க: “உதயநிதியிடம்தான் நீதி கிடைக்குது”… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல தயாரிப்பாளர்…

Ajith Kumar
Ajith Kumar

மதியம் உணவு இடைவேளை வந்தபோது அஜித்திடம் மீண்டும் ஞாபகப்படுத்துவதற்காக பொன்னம்பலம் அவர் அருகில் சென்றாராம். “சார், காலையில் வந்து உதவி கேட்டோமே” என ஞாபகப்படுத்தினார். அதற்கு அஜித், “உங்கள் நண்பர் இன்னும் இங்கேதான் காத்துக்கொண்டு இருக்கிறாரா? நான் காலை 11 மணிக்கே மருத்துவமனையில் பணம் செலுத்தும்படி எனக்கு தெரிந்தவரிடம் கூறிவிட்டேன். அவரும் பணம் செலுத்திவிட்டார். உங்கள் நண்பரை உடனே மருத்துவமனைக்கு போகச்சொல்லுங்கள்” என கூறி பொன்னம்பலத்திற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அஜித்குமார் செய்த இந்த உதவியால் நெகிழ்ச்சியில் இருவரும் மனமாற நன்றி கூறினார்களாம்.